உலக செய்திகள்

உலகைச்சுற்றி + "||" + Around the world

உலகைச்சுற்றி

உலகைச்சுற்றி
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் கடந்த 9ந்தேதி ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் 10–க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 4 பேரை காணவில்லை.
* தென் அமெரிக்க நாடான பெருவில் நேற்று முன்தினம் காலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தில் சேதமடைந்த, கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். 20–க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

* கொலம்பியாவில் அரசுக்கு எதிராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக போரிட்டு வரும் கிளர்ச்சியாளர்கள், வன்முறையை கைவிட்டு அரசுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கூறியுள்ளார். அங்கு இருதரப்புக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்ததை தொடர்ந்து மீண்டும் தாக்குதல்கள் தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

* விரிவான, சர்வதேச மத்தியஸ்தக்குழுவின் மேற்பார்வையின் கீழ் மட்டுமே இஸ்ரேலுடன் அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க முடியும் என பாலஸ்தீன அதிபர் மக்முத் அப்பாஸ் கூறியுள்ளார். எனினும் இந்த குழுவில் அமெரிக்காவின் பங்களிப்பை அவர் எதிர்க்கவில்லை.

*துனீசியாவில் வரி உயர்வை எதிர்த்து தலைநகர் துனிஸ் மற்றும் அண்டை நகரங்களில் கடந்த சில நாட்களாக நடந்து வந்த போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்கள் சமீபத்தில் ஓய்ந்தன. எனினும் 2 நாள் அமைதிக்குப்பின் மீண்டும் அந்த பகுதிகளில் போராட்டங்கள் தொடங்கி உள்ளதால் பதற்றம் நிலவுகிறது.