சந்திர கிரகணத்தின்போது பறக்கும் தட்டில் வேகமாக கடக்கும் வேற்று கிரகவாசிகள் நாசா வீடியோ வெளியீடு


சந்திர கிரகணத்தின்போது பறக்கும் தட்டில் வேகமாக கடக்கும் வேற்று கிரகவாசிகள் நாசா வீடியோ வெளியீடு
x

சந்திர கிரகணத்தின்போது வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டில் வேகமாக கடக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டன்

152 ஆண்டுகளுக்கு பிறகு மூன்று அரிய நிகழ்வுகளுடன் கடந்த 31-ஆம் தேதி அபூர்வ சந்திர கிரகணம் தோன்றியது. இதனை வெறும் கண்களாலேயே மக்கள் காணலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

பல மணி நேரம் நீடித்த இந்த அருமையான நிகழ்வை நாசா பிரத்யேக கேமரா மூலம் ஒரு நிமிட வீடியோவாக வெளியிட்டது. பொதுமக்களாகிய நாம் வெறும் சந்திர கிரணகத்தை மட்டுமே கண்டு மகிழ்ந்தோம். ஆனால் விஞ்ஞானிகளின் பார்வையோ வேறு.

சந்திர கிரகணத்தின்போது ஏலியன்கள் நடமாட்டம் இருந்ததாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள க்ரிஃபித் வானியல் ஆய்வு மையத்தின் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் சந்திரனை பூமி மறைக்கும் அற்புத காட்சிகள் நடந்து வரும் நிலையில் சந்திரனுக்கு இடது புறத்தில் ஒரு வெளிச்சமான மர்ம பொருள் யாரும் கணிக்க முடியாத வேகத்தில் கடக்கிறது. அந்த பொருள் என்னவென்று தெரியவில்லை.

மனிதனால் தயாரிக்கப்பட்ட விண் பொருள் இவ்வளவு வேகத்தில் செல்ல வாய்ப்பே இல்லை என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எனவே ஏலியன்களின் பறக்கும் தட்டுகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் இந்த வீடியோவை பார்க்கும் போது வலுத்துள்ளது.

Next Story