உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம் சூடான் உயிரிழந்தது


உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம் சூடான் உயிரிழந்தது
x

உலகின் கடைசி வடக்கு வெள்ளை ஆண் காண்டாமிருகம் சூடான் உயிரிழந்தது. #Sudan #WhiteRhino


 கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் கென்யாவின் ஒல் பெஜெட்டா என்னும் விலங்குகள் காப்பகத்தில் மிகவும் பாதுகாப்புக்கள் மத்தியில் இருந்த வெள்ளை ஆண் காண்டாமிருகம் (பெயர் சூடான்) உயிரிழந்தது என விலங்குகள் காப்பகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலகில் சுமத்ரா காண்டாமிருகம், இந்திய காண்டாமிருகம், ஜாவா காண்டாமிருகம், கருப்பு காண்டாமிருகம் மற்றும் வெள்ளை காண்டாமிருகம் என 5 காண்டாமிருக வகைகள் உள்ளது. ஆப்பிரிக்காவில் வேட்டையாடுதல் காரணமாக விலங்குகளின் எண்ணிக்கையானது நாளுக்கு, நாள் குறைந்து வருகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் காண்டாமிருகங்கள் அதன் கொம்புக்காக வேட்டையாடப்படும் சூழ்நிலை தொடரும் நிலையில், ஆப்பிரிக்காவிலும் அவை வேட்டையாடப்படுகிறது. காண்டாமிருகங்களுக்கு இயற்கையாக பெரிய எதிரிகள் கிடையாது. அவை வயது உயர்வு அல்லது உடல்நலக்குறைவு காரணமாகவே உயிரிழக்கும். இவைகளுக்கு முக்கிய எதிரி மனிதன் மட்டும்தான்.

ஆப்பிரிக்காவில் யானைகளுக்கு அடுத்தப்படியாக காண்டாமிருகங்களே அதிகமாக வேட்டைக்காரர்களின் இலக்குக்கு ஆளாகிறது.  

இதில் ஒல் பெஜெட்டா வனவிலங்குகள் காப்பம் வடக்கு வெள்ளை காண்டாமிருகங்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கு மிகவும் கவனம் பெற்று இருந்தது. உலகில் வெள்ளை காண்டாமிருகங்களின் எண்ணிக்கையே மொத்தம் மூன்றுதான். அதில் இரண்டு பெண்கள், ஒரே ஒரு ஆண் காண்டாமிருகம்தான். ஒரு வேளை வேட்டைக்காரர்களின் துப்பாக்கி இந்த சூடானையும் சுட்டு விட்டால் இந்த பூமியில் இனி இந்த இனமே இருக்காது என்ற நிலையில் வடக்கு வெள்ளை காண்டாமிருகங்களுக்கு கென்யா அரசு பாதுகாப்பை அதிகரித்து பராமரித்து வந்தது.

இப்போது அங்கிருந்த கடைசி வடக்கு வெள்ளை ஆண் காண்டாமிருகம் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வயது தொடர்பான சிக்கல்கள் காரணமாக காண்டாமிருகம் உயிரிழந்தது என ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒல் பெஜெட்டா விலங்குகள் காப்பகம் தரப்பில் வெளியிட்ட செய்தியில், வடக்கு வெள்ளை ஆண் காண்டாமிருகத்தால் எழுந்து நிற்ககூட முடியவில்லை. மிகவும் நோய்வாடப்பட்டு, பலவினமாக காணப்பட்டது. 45 வயதாகும் வெள்ளை காண்டாமிருகத்தின் சதைகள், எழும்புகள் சிதைந்தது. அதனுடைய தோல் பகுதியில் பெரும் காயங்கள் ஏற்பட்டது, வலது காலிலும் தொற்று ஏற்பட்டு இருந்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு பெண் வெள்ளை காண்டாமிருகங்கள் மட்டுமே இப்போது உலகில் உள்ளது. 

எதிர்காலத்தில் செயற்கை முறையில் பெண் காண்டாமிருகம் மூலமாக இனப்பெருக்கத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடைசி வடக்கு வெள்ளை ஆண் காண்டாமிருகம் சூடானில் பிறந்தது, இதுதான் உலகின் கடைசி ஆண் காண்டாமிருகம் ஆகும். இந்த காண்டாமிருகம் அப்போது செக் குடியரசு உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் 2009-ம் ஆண்டு கென்யாவிற்கு கொண்டு செய்யப்பட்டது. அங்கு இனப்பெருக்கத்திற்கான முயற்சிகள் பெரிதும் பலன் இல்லாமலே காணப்பட்டது. காண்டாமிருகங்கள் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் சிறப்பு உணவுப்பொருட்களுடன் பராமரிக்கப்பட்டது. விலங்குகள் காப்பகத்தில் காண்டாமிருகத்தின் இனச்சேர்க்கை காணப்பட்ட போதிலும் துரதிஷ்டவசமாக கருத்தரிப்பு என்பது வெற்றிகரமாக அமையவில்லை என விலங்குகள் காப்பகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story