உலக செய்திகள்

காட்டுப்பகுதியில் புதரில் சிக்கிக்கொண்ட 3 வயது குழந்தை இரவு முழுவதும் பாதுகாத்த நாய் + "||" + Elderly dog helps save girl lost in Australian bush

காட்டுப்பகுதியில் புதரில் சிக்கிக்கொண்ட 3 வயது குழந்தை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்

காட்டுப்பகுதியில் புதரில் சிக்கிக்கொண்ட 3 வயது குழந்தை  இரவு முழுவதும் பாதுகாத்த  நாய்
ஆஸ்திரேலியாவில் காட்டுப்பகுதியில் புதரில் சிக்கிக்கொண்ட 3 வயது குழந்தையை கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் இரவு முழுவதும் நாய் பாதுகாத்த சம்பவம் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
குயின்ஸ்லாந்து,

ஆஸ்திரேலியா நாட்டில் குயின்ஸ்லாந்து மாகாணத்தை சேர்ந்த 3 வயது குழந்தை ஆரோரா, சம்பவத்தன்று  விளையாட்டுத்தனமாக வீட்டை விட்டு வெளியேறி சுமார் 2 கி.மீ தூரம் வரை காட்டுப்பகுதியில் உள்ள புதரில் சிக்கிக்கொண்டது. குழந்தையுடன் அந்த வீட்டில் வளர்த்து வரும் செல்லப்பிராணி  மாக்ஸ் என்று அழைக்கப்படும் நாய் அக்குழந்தையுடன் உடன் சென்றது. 

குழந்தையை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் அங்குள்ள மலைப்பகுதியில் தேடினர். குழந்தையை தேடுவதற்கான பணியில் 100க்கும் மேற்பட்ட அவசரகால பணியாளர்களும், தன்னார்வலர்களும் ஈடுபட்டனர். மலைப்பகுதியில் குழந்தையை மீட்க 2 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டது.

இந்தநிலையில்,  தங்களின் வீட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திலுள்ள இடத்திலிருந்து அரோரா கத்தியதை கேட்டதாக குழந்தையின் பாட்டி தெரிவித்துள்ளார்.  அதனை தொடர்ந்து அக் குழந்தையை பத்திரமாக மீட்டனர். இது குறித்து அந்த குழந்தையின் பாட்டி கூறுகையில்,

நான் மலையை நோக்கி பேத்தியின் பெயரை அழைத்துக்கொண்டே சென்றேன். நான் மலையின் உச்சியை அடைந்தவுடன் அங்கு வந்த மாக்ஸ் அரோரா இருக்கும் இடத்திற்கு என்னை அழைத்து சென்றது. 

குழந்தை நாயுடன் சேர்ந்து பாறையொன்றின் அடியில் தங்கியிருந்தது என்று அரோராவின் உறவினர்கள் கூறியுள்ளனர்.  மாக்ஸின் செயலை பாராட்டிய போலீசார், அதற்கு கௌரவ போலீஸ் நாய் என்று பெயர் வைத்துள்ளனர்.  குழந்தையை இரவு முழவதும் பாதுகாப்பாக காப்பாற்றிய மாக்சை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.