உலக செய்திகள்

கொளுத்தும் வெயிலில் காரின் முன்பகுதியில் மீனை பொரித்தெடுத்த பெண் + "||" + It's so hot in China that a woman is frying fish on car hood

கொளுத்தும் வெயிலில் காரின் முன்பகுதியில் மீனை பொரித்தெடுத்த பெண்

கொளுத்தும் வெயிலில் காரின் முன்பகுதியில் மீனை பொரித்தெடுத்த பெண்
சீனாவில் கொளுத்தும் வெயிலை பயன்படுத்தி காரின் முன்பகுதியில் மீனை ஒரு பெண் பொரித்தெடுத்து உள்ளார்
 

சீனாவில்   கொளுத்தும் வெயிலால்  அங்குள்ள பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நமது நாட்டில்   தெலுங்கானாவில் வெயிலில் ஆம்லெட் போடுவது மற்றும் சப்பாத்தி போடுவது எல்லாம் நடைபெற்றது அது போல் சீனாவில் ,வெயிலின் வெப்பத்தை  பயன்படுத்தி  அந்நாட்டு பெண்  கார் ஹூடில் வைத்து மீன் சமைத்த  சம்பவம் நடந்துள்ளது. இதனை டெய்லி சினா வெளியிட்டு உள்ளது

கார் முன்பக்கமான ஹூடில் பயங்கரமாக சுடுகிறது. அதை உணர்த்தும் வகையில், அந்த பெண்  மீன் சமைத்துள்ளார். 4 முதல் 5 மீன்கள் வரை கார் ஹூடு சூட்டில் அந்த பெண் சமைத்ததாக தெரிகிறது. அங்கு அடிக்கும் 40 டிகிரி வெயிலால் காரின் மேல்பகுதியில் வைக்கப்பட்ட மீன்கள் சீக்கரத்திலேயே வெந்துவிட்டன.  மீன் நன்கு வெந்து மொறுமொறுப்பாக உள்ளதாக கூறப்பட்டு உள்ளது

சீனாவில் கொளுத்தும் வெயிலை உணர்த்தும் இந்த புகைப்படங்கள் வெளியாகி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியர்களை கூண்டுக்குள் அடைத்து வைத்து துன்புறுத்திய அரேபியர்
இந்தியர்களை கூண்டுக்குள் அடைத்து வைத்து துன்புறுத்திய அரேபிய நபர் ஒருவர் வீடியோ வெளியானதால் சர்ச்சை எழுந்துள்ளது.
2. 72 மணிநேரம் பெண்ணின் இதயத்துடிப்பை நிறுத்தி வைத்து சாதனை படைத்த மருத்துவர்கள்
சீனாவில் 26 வயது இளம்பெண்ணின் இதயத்துடிப்பு 72 மணிநேரம் நிறுத்திவைக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
3. கோமா நிலையில் பெண்ணுக்கு குழந்தை பிறந்த விவகாரம்:மருத்துவமனை நிர்வாகத் தலைவர் ராஜினாமா
14 வருடங்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்த கொடூரம் மருத்துவமனை நிர்வாகத் தலைவர் ராஜினாமா செய்தார்.
4. ரஷ்ய அழகியை மணந்த மலேசிய மன்னர் பதவியைத் துறந்த 2 நாட்களில் மீண்டும் திருப்பம்
ரஷ்ய அழகியை மணந்த மலேசிய மன்னர் தனது பதவியைத் துறந்த செய்தி வெளியான இரண்டே நாட்களில், அவர் மனைவி தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
5. வைரம் பதிக்கப்பட்ட உலகின் மிக விலை உயர்ந்த மாடல் அழகி உதடு கின்னஸ் சாதனை
வைரம் பதிக்கப்பட்ட உலகின் மிக விலை உயர்ந்த வைரம் பதித்த லிப் ஆர்ட் செய்து வைர நிறுவனம் ஒன்று கின்னஸ் சாதனை நிகழ்த்தி உள்ளது.