உலக செய்திகள்

கிம் ஜாங் அன் சந்திப்பு மிகப்பெரிய பிரச்சினையை தீர்க்கும் டிரம்ப் நம்பிக்கை + "||" + Meet with Kim Jong Un very, very good, will solve big problem, says Trump

கிம் ஜாங் அன் சந்திப்பு மிகப்பெரிய பிரச்சினையை தீர்க்கும் டிரம்ப் நம்பிக்கை

கிம் ஜாங் அன் சந்திப்பு   மிகப்பெரிய பிரச்சினையை தீர்க்கும் டிரம்ப் நம்பிக்கை
கிம் ஜாங் அன் சந்திப்பு மிகப்பெரிய பிரச்சினையை தீர்க்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
சிங்கப்பூர்

உலக நாடுகளின் எதிர்பார்ப்புகளின் படி   திட்டமிட்ட படி  இன்று காலை  சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர ஓட்டலில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நடைபெற்றது.  உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு சுமார் 41 நிமிடங்கள் நீடித்தது. இரு நாட்டு தலைவர்களும் நேரடியாக சந்தித்துக்கொள்வது வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும். இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். 

இருநாட்டு அதிபர்களும் முதலில் காலையில் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினர். இச்சந்திப்பின் போது நமது கூட்டணி வெற்றிகரமாக அமையும்; இருநாடுகளும் ஒன்றாக பணியாற்றுவதை எதிர்பார்க்கிறேன் என கிம்மிடம் ட்ரம்ப் கூறினார்.

சவால்களை எதிர்நோக்குவோம்   ஆனால் அவர் டிரம்ப் உடன் பணிபுரிவோம்  என  கிம் கூறினார். மிக, மிக நல்லது, இந்த சந்திப்பு மிகப்பெரிய பிரச்சினையை தீர்க்கும். என டிரம்ப் கூறினார்

"நான் முன்பு கூறியது போல், நான் உங்களுடன்  நெருக்கமாக ஒத்துழைக்க தயாராக உள்ளேன்,  மிஸ்டர்  ஜனாதிபதி, பெரிய சவால்கள் இருக்கும் ஆனால் நான் இதை செய்ய தயாராக இருக்கிறேன். "என கிம் கூறினார்.

இதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்  "நாம் அதை தீர்க்க வேண்டும், நாம் வெற்றி பெறுவோம். நான் உங்களுடன்  வேலை செய்ய ஆவலாக இருக்கிறேன். அது செய்யப்படும்.  மிக்க நன்றி  என கூறினார்