கூட்டத்தில் கத்தியவரை உன் அம்மாவிடம் போ செல்லம் என கூறிய டிரம்ப்


கூட்டத்தில் கத்தியவரை உன் அம்மாவிடம் போ செல்லம்  என கூறிய டிரம்ப்
x
தினத்தந்தி 22 Jun 2018 12:16 PM GMT (Updated: 22 Jun 2018 12:16 PM GMT)

டிரம்ப் பேரணி ஒன்றில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது எதிர்ப்பு தெரிவித்த ஒரு நபரை அது ஆணா பெண்ணா, அவனை வெளியே துரத்துங்கள் என்று கொந்தளித்த வீடியோ ஒன்று இணையத்தில் வலம் வருகிறது



அமெரிக்க அதிபர் டிரம்ப் பேரணி ஒன்றில் குடியுரிமை தொடர்பாக உரையாற்றிக்கொண்டிருந்தார். அப்போது குடுமி கட்டியிருந்த ஒரு நபர் எரிச்சலூட்டும் வகையில் சர்ச்சைக்குரிய புகைப்படம் ஒன்றைக் காட்டி கத்திக்கொண்டிருந்தார்.பொறுத்துப் பொறுத்துப் பார்த்த டிரம்ப் ஒரு கட்டத்தில் “அவனை வெளியேற்றுங்கள், அது ஆணா இல்லை பெண்ணா, அவனை வெளியேற்றுங்கள்” என்று சத்தமிட ஆரம்பித்து விட்டார்.உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் அந்த மனிதனை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கினார்கள்.

அப்போதும் கோபம் அடங்காத டிரம்ப் “உன் அம்மாவிடம் போ செல்லம்” என்றார். அவரது ஆதரவாளர்களும் டிரம்புக்கு ஆதரவாகவும் அந்த நபருக்கு எதிராகவும் குரல் எழுப்ப ஆரம்பித்தனர்.“அது ஆணா பெண்ணா, அவருக்கு முடி வெட்ட வேண்டும், என்னால் அது ஆணா இல்லை பெண்ணா என்று சொல்ல முடியவில்லை, அவனை வெளியேற்றுங்கள்” என்றார்.அதற்குள் ஒரு வழியாக பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை வெளியேற்ற டிரம்ப் தனது உரையைத் தொடர்ந்தார்.


Next Story