உலக செய்திகள்

உலகின் இளம் கோடீஸ்வரி! + "||" + The world young millionaire!

உலகின் இளம் கோடீஸ்வரி!

உலகின் இளம் கோடீஸ்வரி!
நார்வே நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்ட்ரா ஆண்ட்ரெசன்தான் உலகிலேயே இளம் கோடீஸ்வரி என்று ‘போர்ப்ஸ்’ பத்திரிகை மதிப்பிட்டுள்ளது.
போர்ப்ஸ் பத்திரிகை இந்த ஆண்டுக்கான உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலை  வெளியிட்டுள்ளது. அப்பட்டியலில் புதிதாக 437 பில்லியனர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அவர்களில், உலகின் இளமையான கோடீஸ்வரி என்ற பெருமையை நார்வேயின் அலெக்சாண்ட்ரா ஆண்ட்ரெசன் பெற்றிருக்கிறார்.


21 வயதாகும் அலெக்சாண்ட்ராவுக்கு கடந்த 2007-ம் ஆண்டு அவரது தந்தையின் முதலீட்டு நிறுவனத்தில் இருந்து 42 சதவீதப் பங்குகள் கிடைத்துள்ளன. அதை வைத்து இவர் தொழில் செய்து பில்லியனர் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

முதல் தலைமுறையாக பில்லியனர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஸ்டிரைப்ஸ் பேமண்ட்ஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் தலைவரான ஜான் கலிசன், தன்னுடைய சொந்த உழைப்பில் 12 பில்லியன் டாலர்கள் சம்பாதித்துள்ளார்.

சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட பில்லியனர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர்களில் 27 நபர்கள் இறந்துள்ளனர். அவர்களில் குறைந்த வயது கொண்டவர், கோன் பார்ப்ரேஷன் நிறுவனத்தின் தலைவரான நிக்கலாஸ் ஹெரால்ன். அவருக்கு வயது 53.

பில்லியனர்கள் அனைவரின் சராசரி வயது 63 என்றும், இப்பட்டியல் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது ஒரு வயது இளமை அடைந்திருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.