2500 ஆண்டுகளுக்கு முன்பே லேப்டாப் இருந்ததா?


2500 ஆண்டுகளுக்கு முன்பே லேப்டாப் இருந்ததா?
x

அமெரிக்காவின் மியூசியத்தில் இருந்த பலங்கால சிற்பம் ஒன்றில் லேப்டாப் பயன்படுத்தப்படுவது போன்று உள்ளதால், பலரும் குழப்பத்தில் உள்ளனர்.


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாசெஞ்சல்சில் உள்ள ஜெ பவுல் கெட்டி  மியூசியத்தில் பண்டைய கால சிற்பங்கள் பல வைக்கப்பட்டு உள்ளன. அங்கிருக்கும்  சிற்பம் ஒன்றில், சிறுமியிடம் பெட்டி போன்ற  ஒரு பொருள் உள்ளது. அதை பெண் ஒருவர் திறந்து பார்ப்பது போன்று உள்ளது. அதை சற்று கூர்ந்து கவனித்தால், பார்ப்பதற்கு தற்போது உள்ள நவீன காலத்தில் பயன்படுத்தப்படும் லேப்டாப் போன்றே உள்ளது.

அதுமட்டுமின்றி அதில் யுஎஸ்பி போர்ட் மற்றும் சார்ஜ் போடுவதற்கு ஏற்ற வகையில் இரண்டு துளைகளும் உள்ளன. இது தொடர்பான வீடியோ  யூ டியூப் சேனலில் வெளியாகியுள்ளது.

குறித்த வீடியோவைக் கண்ட மக்கள் பலரும் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்ய, ஒரு சிலர் இது லேப்டாப் கிடையாது எனவும், பண்டைய காலத்தில் பயன்படுத்தப்படும் நகைப் பெட்டியாக இருக்கலாம் அல்லது புத்தகமாக இருக்கலாம் என்று கூறி வருகின்றனர். இந்த கற்சிலை 2500-ஆண்டுகள் பழமையானது எனவும் கூறப்படுகிறது.


Next Story