உலக செய்திகள்

‘உங்களை யாரும் இங்கே அழைக்கவில்லை உங்கள் நாட்டிற்கு திரும்பி செல்லுங்கள் ’ அமெரிக்காவில் சீக்கியர் மீது தாக்குதல் + "||" + ‘You are not welcome here, go back to your country’: Sikh man beaten up in California

‘உங்களை யாரும் இங்கே அழைக்கவில்லை உங்கள் நாட்டிற்கு திரும்பி செல்லுங்கள் ’ அமெரிக்காவில் சீக்கியர் மீது தாக்குதல்

‘உங்களை யாரும் இங்கே அழைக்கவில்லை உங்கள் நாட்டிற்கு திரும்பி செல்லுங்கள் ’ அமெரிக்காவில் சீக்கியர் மீது தாக்குதல்
அமெரிக்காவில் சீக்கியரை மர்ம நபர்கள் 2 பேர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கலிபோர்னியா,

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 50 வயது மதிக்கதக்க நபரை  மர்ம நபர்கள் 2 பேர் கடுமையாக தாக்கி உள்ளனர். அப்போது அவர்கள், உங்களை யாரும் இங்கே அழைக்கவில்லை.

உங்கள் நாட்டிற்கு திரும்ப்பிச்செல்லுங்கள் என கூறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

50 வயது சீக்கிய நபரை மர்ம நபர்கள் 2 பேர் கடுமையாக தாக்கி உள்ளனர். இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். 

தலைப்பாகை மீது தாக்குதல் நடத்தியதால் அவர் தலையில் காயமின்றி தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அமெரிக்காவில் சீக்கியர்கள் மீது இது போன்ற தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.