உலக செய்திகள்

உலகைச்சுற்றி... + "||" + Around the World

உலகைச்சுற்றி...

உலகைச்சுற்றி...
அமெரிக்காவில் மருந்து விலைகளை குறைப்பது குறித்து அடுத்த வாரம் அறிவிப்பு வெளியிடப்படும் என ஜனாதிபதி டிரம்ப் கூறி இருக்கிறார்.

* அமெரிக்காவில் கடந்த ஆண்டு விசா காலம் முடிந்த பின்னரும் 21 ஆயிரம் இந்தியர்கள் வெளியேறாமல், அங்கு தங்கி இருந்ததாக அந்த நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவித்து உள்ளது.

* தவறான முடிவுகள் எடுக்கும் வழக்கத்தால் உலகின் நம்பிக்கையை அமெரிக்கா இழந்துவிட்டது; அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை நடத்துவது என்பது கற்பனைக்கும் அப்பாற்பட்ட கடினமான ஒன்று என்று ஈரான் வெளியுறவு மந்திரி முகமது ஜாவத் கருத்து தெரிவித்து உள்ளார்.


* வெனிசூலாவில் தன்னை ஆளில்லா விமான தாக்குதல் நடத்தி கொல்ல நடந்த முயற்சியில், அந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு தொடர்பு உள்ளது என்று அதிபர் நிக்கோலஸ் மதுரோ கூறி உள்ளார். இதற்கிடையே அந்த முயற்சியில் தனக்கு பங்கு இருப்பதாக சல்வடோரே என்ற முன்னாள் போலீஸ் அதிகாரி ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

* இருதரப்பு ராணுவ விவகாரங்கள் குறித்து அமெரிக்க ராணுவ மந்திரி ஜிம் மேட்டிசும், துருக்கி ராணுவ மந்திரி ஹூலுசி அகாரும் தொலைபேசி வழியாக விவாதித்து உள்ளனர்.

* அமெரிக்காவில் மருந்து விலைகளை குறைப்பது குறித்து அடுத்த வாரம் அறிவிப்பு வெளியிடப்படும் என ஜனாதிபதி டிரம்ப் கூறி இருக்கிறார்.

* பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகன்கள் ஹசன், உசேன் ஆகிய 2 பேரின் பெயர்களும் அந்த நாட்டு அதிகாரிகளால் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது. அவர்கள் 2 பேரும் பாகிஸ்தான் பாஸ்போர்ட்டில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள முடியாது. தங்கள் மீதான ஊழல் வழக்குகளில் அவர்கள் கோர்ட்டில் ஆஜர் ஆகாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. டெல்டா பாசனத்துக்காக கல்லணைக்கால்வாயில் கூடுதல் தண்ணீர் திறப்பு
டெல்டா பாசனத்துக்காக கல்லணைக்கால்வாயில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
2. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை கலெக்டர்கள் அறிவிப்பு
கஜா புயலால் பாதித்த பகுதிகளில் மறுசீரமைப்பு பணி நடைபெறுவதால் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
3. தாய் தமிழகத்தோடு இணைந்த நாள்: குமரி மாவட்டத்திற்கு 1-ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு
குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளான நவம்பர் 1-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவித்துள்ளார்.
4. நாடாளுமன்ற தேர்தலிலும் காங்.-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி தொடரும் தேவேகவுடா, சித்தராமையா கூட்டாக அறிவிப்பு
நாட்டின் நலனுக்காக வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக செயல் படுவோம் என்றும், நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி தொடரும் என்று தேவேகவுடா, சித்தராமையா கூட்டாக அறிவித்தனர்.
5. பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து பரிசீலனை: தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி பற்றி முடிவு - எடப்பாடி பழனிசாமி
பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும், தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.