உலக செய்திகள்

சீனாவில் புகழ் பெற்ற அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா ஓய்வு அறிவிப்பு + "||" + Alibaba Co-Founder Jack Ma Announces Retirement

சீனாவில் புகழ் பெற்ற அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா ஓய்வு அறிவிப்பு

சீனாவில் புகழ் பெற்ற அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா ஓய்வு அறிவிப்பு
சீனாவில் புகழ் பெற்ற ஆன்லைன் வர்த்தக சேவை நிறுவனம் ஆன அலிபாபாவின் தலைவர் ஜாக் மா ஓய்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

சான் பிரான்சிஸ்கோ,

சீனாவில் அலிபாபா நிறுவனம் ஆன்லைன் வழியேயான இ வர்த்தக சேவையில் புகழ் பெற்றது.  இந்த நிறுவனம், நுகர்வோர் ஒருவரிடம் இருந்து மற்றொரு நுகர்வோர், வணிக நிறுவனத்திடம் இருந்து நுகர்வோர் மற்றும் வணிக நிறுவனம் மற்றொரு வணிக நிறுவனத்திடம் என பலவகையான விற்பனை சேவைகளை அளித்து வருகிறது.

இந்த நிறுவனத்தில் தலைவராக சீனாவை சேர்ந்த ஜாக் மா இருந்து வருகிறார்.  அலிபாபா நிறுவனம் கடந்த 1999ம் ஆண்டு தொடங்கப்பட்டது.  அதன் நிறுவனர்களில் ஒருவராகவும் உள்ள ஜாக் அதனை தொடங்குவதற்கு முன் ஆங்கில பாட ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிறுவனத்தினை தொடங்குவதற்காக தனது நண்பர்களிடம் பேசி 60 ஆயிரம் அமெரிக்க டாலர்களை ஜாக் கேட்டு பெற்றுள்ளார்.

தொடக்கத்தில் சீனாவில் கிழக்கு நகரான ஹேங்ஜூவில் உள்ள அவரது குடியிருப்பு பகுதியில் அலிபாபா நிறுவனம் நடத்தப்பட்டு வந்துள்ளது.

சீனாவின் பணக்காரர்கள் பட்டியலில் ஒருவராக உள்ள அவரிடம் 3 ஆயிரத்து 66 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் சொத்துகள் உள்ளன என போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

தனது ஓய்வு அறிவிப்பினை இது முடிவல்ல என்றும் ஒரு சகாப்தத்தின் தொடக்கம் என்றும் கூறியுள்ள ஜாக், கல்வி நோக்கம் சார்ந்த சேவையில் தனது நேரத்தினை செலவிட முடிவு செய்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மாவட்ட தலைவர் கைது: போலீஸ் வேனை மறித்து பா.ஜனதா கட்சியினர் மறியல் திருத்துறைப்பூண்டியில் பரபரப்பு
திருத்துறைப்பூண்டியில் பா.ஜனதா மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அந்த கட்சியினர் போலீஸ் வேனை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. கூட்டுறவு வார விழாவில் ரூ.66¼ லட்சம் கடன் பால்வள தலைவர் எஸ்.ஏ.அசோகன் வழங்கினார்
கூட்டுறவு வார விழாவில் ரூ.66¼ லட்சம் கடனுதவியை பால்வள தலைவர் எஸ்.ஏ.அசோகன் வழங்கினார்.
3. பன்றிக்காய்ச்சலுக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பலி
பன்றிக்காய்ச்சலுக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பரிதாபமாக இறந்தார்.