பாகிஸ்தான் பள்ளி கூடத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு; 4 குழந்தைகள் காயம்


பாகிஸ்தான் பள்ளி கூடத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு; 4 குழந்தைகள் காயம்
x
தினத்தந்தி 24 Oct 2018 12:56 PM GMT (Updated: 24 Oct 2018 12:56 PM GMT)

பாகிஸ்தானில் பள்ளி கூடம் ஒன்றில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 4 குழந்தைகள் காயமடைந்தனர்.

கராச்சி,

பாகிஸ்தான் நாட்டில் பலுசிஸ்தான் மாகாணத்தின் கட்டா நகரில் டேனிஷ் கடா என்ற தனியார் பள்ளி கூடம் ஒன்று உள்ளது.  இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர் பள்ளி கூட வாசலில் வைத்து துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த சம்பவத்தில் 9 முதல் 12 வயது வரையிலான 3 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவியின் கால்களில் குண்டுகள் பட்டு காயமடைந்தனர்.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர்கள் நலமுடன் உள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு மாகாண உள்துறை மந்திரி மீர் சலீம் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என கூறினார்.

கடந்த 2014ம் ஆண்டு பெஷாவர் நகரில் ராணுவ பள்ளி கூடம் ஒன்றில் தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெருமளவிலான பள்ளி குழந்தைகள் உள்பட 149 பேர் கொல்லப்பட்டனர்.

Next Story