அமெரிக்கா இதுவரை இல்லாத அளவு கடுமையான தடைகளை ஈரான் மீது இன்று விதிப்பு


அமெரிக்கா இதுவரை இல்லாத அளவு கடுமையான தடைகளை ஈரான் மீது இன்று விதிப்பு
x

அமெரிக்கா இதுவரை இல்லாத அளவு கடுமையான தடைகளை ஈரான் மீது இன்று விதிக்கவுள்ளது.


ஈரான் மீதும் அதனுடன் வர்த்தகம் செய்யும் அரசுகள் மீதும், 2015 அணு ஆயுத ஒப்பந்தம்படி நீக்கப்பட்ட தடைகளை டிரம்பின் நிர்வாகம் மீண்டும் விதிக்கவுள்ளது.

இது எண்ணெய் ஏற்றுமதி, வர்த்தக போக்குவரத்து, வணிகம் என அனைத்து விதத்திலும் பொருளாதாரத்தை பாதிக்கும். நேற்று ஆயிரக்கணக்கான ஈரான் மக்கள் பலர் இதற்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தினர்.

தங்கள் நாட்டின் பாதுகாப்பு வலிமையை காட்ட திங்களன்றும், செவ்வாயன்றும் விமான அணிவகுப்புகளை நடத்தப்போவதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இடைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்துக்கு செல்வதற்கு முன்னர் பேசிய டிரம்ப், "ஈரான் மீது விதிக்கப்படும் தடைகள் மிகவும் கடுமையானது. இதுதான் இதுவரை விதித்ததிலேயே கடுமையான தடைகள். இதற்கு பிறகு என்ன நடக்க போகிறது என்பதை பார்க்கலாம்" என தெரிவித்தார்.அமெரிக்கா இதுவரை இல்லாத அளவு கடுமையான தடைகளை ஈரான் மீது இன்று விதிக்கவுள்ளது.

ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளான இந்தியா, சீனா, தென் கொரியா துருக்கி என தங்களின் கூட்டனி நாடுகளை டிரம்ப் நிர்வாகம் தடையிலிருந்து விலக்கியுள்ளது.

Next Story