‘ஜி–20’ உச்சி மாநாட்டின் போது புதினுடனான டிரம்ப் சந்திப்பு ரத்து?


‘ஜி–20’ உச்சி மாநாட்டின் போது புதினுடனான டிரம்ப் சந்திப்பு ரத்து?
x
தினத்தந்தி 28 Nov 2018 11:15 PM GMT (Updated: 28 Nov 2018 7:40 PM GMT)

கிரிமியாவில் சர்ச்சைக்குரிய இடத்தில் உக்ரைன் நாட்டின் 3 போர் கப்பல்கள் மீது ரஷியா தாக்குதல் நடத்தி, அதன் ஊழியர்களை சிறைப்பிடித்தது.

வாஷிங்டன்,

உலகளவில் இது  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் கண்டனத்துக்கும் வழி வகுத்தது.

ஏற்கனவே கிரிமியாவை ரஷியா தன்னுடன் இணைத்துக்கொண்டதில் கடும் அதிருப்தியில் இருந்த அமெரிக்காவுக்கு, ரஷியாவின் இந்த தாக்குதல் நடவடிக்கை மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைன்–ரஷியா மோதல் விவகாரத்தில் உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் தங்களது ஆதரவை வழங்க வேண்டும் என்று அமெரிக்கா குரல் கொடுத்துள்ளது.

இந்த நிலையில், அர்ஜென்டினா நாட்டின் பியுனோஸ் அயர்ஸ் நகரில் ‘ஜி–20’ உச்சி மாநாட்டின்போது ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சந்தித்து பேச திட்டமிட்டிருந்தார். அப்போது பாதுகாப்பு, ஆயுத கட்டுப்பாடு, உக்ரைன் விவகாரம், மத்திய கிழக்கு பிரச்சினைகள் பற்றி பேச முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையே ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழுக்கு டிரம்ப் பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘‘ரஷிய அதிபர் புதினுடனான எனது சந்திப்பு ரத்து ஆகலாம். உக்ரைன் கப்பல்கள் மீது ரஷியா நடத்திய தாக்குதல் பற்றிய முழுமையான அறிக்கைக்காக காத்திருக்கிறேன். நான் ஆக்கிரமிப்புகளை விரும்பவில்லை. அந்த ஆக்கிரமிப்பையும் (உக்ரைன் போர் கப்பல்களை ரஷியா கைப்பற்றியது) விரும்பவில்லை’’ என கூறினார்.


Next Story