உலக செய்திகள்

பாகிஸ்தானில் நடந்த சார்க் கூட்டத்தில் இருந்து இந்தியா வெளிநடப்பு + "||" + Indian diplomat walks out of SAARC meeting in Pakistan over PoK minister's presence

பாகிஸ்தானில் நடந்த சார்க் கூட்டத்தில் இருந்து இந்தியா வெளிநடப்பு

பாகிஸ்தானில் நடந்த சார்க் கூட்டத்தில் இருந்து இந்தியா வெளிநடப்பு
பாகிஸ்தானில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அமைச்சர் முன்னிலையில் நடந்த சார்க் கூட்டத்தில் இருந்து இந்தியா வெளிநடப்பு செய்து உள்ளது.
இஸ்லாமாபாத்

ஆக்கிரமிப்பு காஷ்மீர்  அமைச்சர் சவுத்ரி முகமது சயீத்தின் முன்னிலையில்  சார்க் வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டம்  பாகிஸ்தானில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இந்தியாவின் எதிர்ப்பை பதிவுசெய்ய இந்திய தூதரக அதிகாரி  சுபம் சிங் கூட்டத்தை விட்டுச்வெளியேறினார்.

காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்தியா கருதுகிறது மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீருக்கு எந்த அமைச்சரையும் இந்தியா அங்கீகரிக்கவில்லை.

2016 ஆம் ஆண்டில் உரி பகுதியில் இந்திய ராணுவ முகாமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருக்கும் 19-வது சார்க் மாநாட்டில் இருந்து இந்தியா விலகி கொண்டது. வங்காளதேசம் , பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் மாநாட்டில் கலந்துகொள்ள மறுத்துவிட்டதால் உச்சிமாநாடு நிறுத்தப்பட்டது. இதுவரை சார்க் கூட்டம் நடந்தது இல்லை.

ஜம்முவில் போலீசார் மிருகத்தனமாக கொலை செய்யப்பட்ட பின்னர் செப்டம்பர் மாதம்  நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை (ஐ.கே.ஜி.ஏ.) யில் பாகிஸ்தானுடன் வெளியுறவு மந்திரி அளவில் பேச்சுவார்த்தைகள் நடத்த இந்தியா அழைப்பு விடுத்தது.

காஷ்மீரி தீவிரவாதிகளின் தளபதி பர்ஹான் வானிக்கு  பாகிஸ்தான் தபால் தலை வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரச்சினைகளை தீர்க்க இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் : ஐநா
இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஐநா தெரிவித்துள்ளது.
2. பாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு
பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த மியான் சாகிப் நிசார் ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக ஆசிப் சயீத்கான் கோசா நியமிக்கப்பட்டார்.
3. மெல்போர்ன் கிரிக்கெட்: இந்தியாவுக்கு 231 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
மெல்போர்னில் நடைபெற்று வரும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 231 ரன்களை ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது.
4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி முதலில் பந்து வீச்சு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.
5. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிப்பு
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித்தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.