உலக செய்திகள்

சிங்கப்பூரில் கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திய இந்தியருக்கு சிறை + "||" + In Singapore Pregnant wife Stabbed with a knife Indian is prison

சிங்கப்பூரில் கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திய இந்தியருக்கு சிறை

சிங்கப்பூரில் கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திய இந்தியருக்கு சிறை
சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஜெயசீலன் சந்திரசேகர். இவருடைய மனைவி மயூரி கிருஷ்ணகுமார். இவர்களுக்கு கடந்த 2013–ம் ஆண்டு திருமணம் நடந்தது. 3 வயதில் குழந்தை உள்ளது. இதற்கிடையில் மயூரி 2–வது முறையாக கர்ப்பமானார்.

சிங்கப்பூர், 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மனைவி தனக்கு துரோகம் செய்து விட்டதாவும், முதல் குழந்தை தனக்கு பிறக்கவில்லை எனவும் கூறி மயூரியிடம் ஜெயசீலன் தினந்தோறும் தகராறு செய்து வந்தார்.

ஒரு கட்டத்துக்கு மேல் கணவரின் கொடுமைகளை சகித்துக்கொள்ள முடியாமல் கடந்த ஆண்டு டிசம்பர் 24–ந்தேதி, மயூரி வீட்டை விட்டு ஓடினார். பின்னர் அவர் விபசார அழகிகளாக இருக்கும் தனது முன்னாள் தோழிகளிடம் அடைக்கலம் புகுந்தார்.

டிசம்பர் 30–ந்தேதி, மயூரி காலை உணவு வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்றார். அங்கு தனது ஆண் நண்பரான நந்தா என்பவரை பார்த்து அவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த ஜெயசீலன் தனது மனைவி விபசார அழகியாக மாறிவிட்டதாகவும், அவருடன் பேசிக் கொண்டிருக்கும் நபர் தரகர் எனவும் நினைத்துக் கொண்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மனைவியை சரமாரியாக தாக்கியதோடு, கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் அவரது வயிற்றில் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடினார். அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக வயிற்றில் இருந்த குழந்தைக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜெயசீலனை கைது செய்தனர்.

இந்த வழக்கு சுமார் 1 ஆண்டு காலமாக சிங்கப்பூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் ஜெயசீலன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் மனைவியை கத்தியால் குத்திய ஜெயசீலனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. பரமத்திவேலூரில் கள்ளக்காதல் தகராறில் டீக்கடைக்காரருக்கு கத்திக்குத்து வாலிபர் கைது
பரமத்திவேலூரில் கள்ளக்காதல் தகராறில் டீக்கடைக்காரரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
2. 2½ வயது குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை
2½ வயது குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
3. பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் தாய்-மகன் உள்பட 3 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை
பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் தாய்- மகன் உள்பட 3 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
4. கிர்காவில் தியேட்டர் மேலாளருக்கு கத்திக்குத்து; 2 பேர் கைது
தியேட்டர் மேலாளரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற கணவன்-மனைவிக்கு கத்திக்குத்து ஒருவர் கைது; 3 பேருக்கு வலைவீச்சு
கொரடாச்சேரி அருகே கடன் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்திய பிறகும் ஆர்.சி. புக் திருப்பி தராததால் தகராறு ஏற்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற கணவன்-மனைவியை வழிமறித்து கத்தியால் குத்தினர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார் மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.