வெள்ளை மாளிகைக்கு புதிய பணியாளர் தலைவர் - டிரம்ப் அறிவிப்பு


வெள்ளை மாளிகைக்கு புதிய பணியாளர் தலைவர் - டிரம்ப் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Dec 2018 12:15 AM GMT (Updated: 15 Dec 2018 7:40 PM GMT)

அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி என்பது செல்வாக்கும், அதிகாரமும் மிகுந்த பதவி. இந்தப் பதவியில் இருந்து வருபவர் ஜான் கெல்லி.

வாஷிங்டன்,

ஜான் கெல்லிக்கும், அதிபர் டிரம்புக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து ஜான் கெல்லி இந்த மாத இறுதியில் பதவி விலகுவதாக தகவல் வெளியானது. அதை ஜனாதிபதி டிரம்ப் உறுதி செய்தார். ஜான் கெல்லியின் இடத்துக்கு தனது மருமகன் ஜெரட் குஷ்னரை நியமிக்க டிரம்ப் பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகை பணியாளர் தலைவர் பதவிக்கு தற்காலிகமாக மிக் முல்வானே என்பவரை டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.

இதுபற்றி டுவிட்டரில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், ‘‘மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலக இயக்குனர் மிக் முல்வானே, வெள்ளை மாளிகை பணியாளர்களின் தற்காலிக தலைவராக நியமிக்கப்படுகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். அவர் நிர்வாகத்தில் மிகச் சிறப்பான பணியை செய்திருக்கிறார்’’ என குறிப்பிட்டுள்ளார்.


Next Story