உலக செய்திகள்

அழகு மிக்க வளையங்களை இழந்து வரும் சனிக்கிரகம் - நாசா விஞ்ஞானிகள் + "||" + Saturn losing its beauty, iconic rings start disappearing: NASA confirms

அழகு மிக்க வளையங்களை இழந்து வரும் சனிக்கிரகம் - நாசா விஞ்ஞானிகள்

அழகு மிக்க வளையங்களை இழந்து வரும் சனிக்கிரகம் - நாசா விஞ்ஞானிகள்
தன்னுடைய அழகு மிக்க வளையங்களை சனிக்கிரகம் இழந்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வாஷிங்டன்,

சூரியக் குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களில் 6-வதாக இருப்பது சனி. இது சூரியனில் இருந்து சுமார் 142 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஒரு முறை சூரியனைச் சுற்றிவர 29 வருடங்களை எடுத்துக் கொள்கிறது. தன்னைத்தானே சுற்றிவர 10 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.

வியாழனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கோள் சனியாகும். சனிக்கிரகத்திற்குள் சரியாக 763 பூமிகளை அடக்கி விடலாம் என்றாலும், சனியின் எடை, பூமியின் எடையை விட 95 மடங்கு தான் அதிகம். சனி ஒரு வாயுக்கோளம். அதில் கடினமான உட்பகுதி மிகச்சிறியது.

சனியின் ஈர்ப்பு விசை பூமியிலிருந்து அதிகம் வேறுபடவில்லை. சுமார் 1.17 மடங்கு அதிகமாக உள்ளது. பூமியில் 70 கிலோ எடையுள்ள ஒருவர் சனியில் 82 கிலோ இருப்பார். சூரியனில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால் சனியின் சராசரி வெப்பநிலை மிக மிகக் குறைவு. காற்று மண்டலத்தில் அமோனியா உறைந்து போவதால், கோளின் மேற்பரப்பு முழுவதும் பனிப்பிரதேசமாகவே காணப்படுகிறது. பிற கோள்களில் காணப்படாத ஒரு தட்டையான வளையம் இந்த கோளின் நடுப்பகுதியில் சுற்றி உள்ளது என்பது தான் இதன் சிறப்பு.  சனிக்கிரகத்திற்கு அழகை கொடுக்கும் இந்த வளையம்  தற்போது படிப்படியாக மறைந்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்து உள்ளது. மேலும் சனிக்கிரகத்தின் இந்த சிறப்பு மிக்க அம்சம் அடுத்த 100 மில்லியன் ஆண்டுகளில் முற்றிலும் மறைந்து விடும் என கூறுகின்றனர். நாசாவின் நிபுணர்கள் கருத்துப்படி, இந்த வளையங்கள் கிரகத்தின் வலுவான காந்தப்புலத்தினால் காரணமாக பிரிக்கப்படுகின்றன என கூறுகின்றனர். சனியின் வளையங்கள் பெரும்பாலும் நீர் பனிக்கட்டிகளைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. அவை மைக்ரோஸ்கோபிக் தூசிகளால் இணைந்து  பல மைல்களுக்கு நீண்டு கொண்டிருக்கும் கற்பாறைகளாக உள்ளன. 

சனிக்கிரகத்தைச் சுற்றி புதிய வளையம் ஒன்றையும் கேசினி கண்டுபிடித்தது, புதிய அறிவியல் கொடையாகவே பார்க்கப்படுகிறது. இது மங்கலானது, சூரியன் கோளுக்கு பின்னால் இருக்கும் போது சில கோணங்களிலிருந்து மட்டுமே தெரியக்கூடியது.

சனிக்கிரக வளையங்களின் செயல்களை ஆய்வு செய்வதன் மூலம் கிரகங்கள் எப்படி உருவாகின்றன என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய முடிந்தது. வளையங்களுக்கிடையே சிறு நிலவு உருவாக்கத்தை கேசினி காட்டிக் கொடுத்தது. வளையம் எந்த மூலக்கூறுகளால் ஆனதோ அதே கூறுகளால் இந்த சிறு நிலவுகளும் உருவாவது கண்டுபிடிக்கப்பட்டது.

விஞ்ஞானிகள் சனிக்கிரகத்தின்  மொத்த வயது 4 பில்லியன் ஆண்டுகள் ஆக இருக்கலாம் என்று நம்புகிறார்கள். இந்த வளையங்கள் விழுந்து விட்டால் கிரகத்தின் முழு அழகு விரைவில் இழந்து விடும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பூமியின் வட காந்த முனையில் விரைவான மாற்றம் : திசைகாட்டும் கருவியில் மாற்றம் அவசியம் ஆய்வாளர்கள்
பூமியின் வட காந்த முனையில் விரைவான மாற்றம் அடைந்து வருகிறது திசைகாட்டும் கருவியில் புதிய மாற்றங்கள் அவசியம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
2. இறக்கும் நிலையில் படிகமாக மாறிவரும் சூரியன் விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்
இறக்கும் நிலையில் நமது பூமிக்கு உரிய சூரியன் படிகமாக மாறிவருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
3. நட்சத்திரத்தை விழுங்கி சுருங்கும் கருந்துளை ஒன்றை நாசா கண்டுபிடிப்பு
நட்சத்திரத்தை விழுங்கி சுருங்கிய கருந்துளை ஒன்றை நாசா தொலைநோக்கி கண்டுபிடித்து உள்ளது.
4. சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிய பனிக்கிரகம் கண்டுபிடிப்பு
நாசா அனுப்பிய டெஸ் செயற்கைக்கோள் சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளது.
5. விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய ஆராய்ச்சியாளர் குழந்தை போல நடைபழகும் வீடியோ
நீண்ட நாட்களுக்கு பிறகு விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய ஆராய்ச்சியாளர் ஒருவர், புதிதாக பிறந்த குழந்தை போல நடைபழகும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.