நார்வேயில் வினோத சம்பவம் திருட முயன்று காருக்குள் சிக்கிக்கொண்ட சிறுவன் போலீசுக்கு போன் செய்து உதவி கேட்டான்


நார்வேயில் வினோத சம்பவம் திருட முயன்று காருக்குள் சிக்கிக்கொண்ட சிறுவன் போலீசுக்கு போன் செய்து உதவி கேட்டான்
x
தினத்தந்தி 25 Dec 2018 10:30 PM GMT (Updated: 25 Dec 2018 8:36 PM GMT)

நார்வே நாட்டின் 3–வது பெரிய நகரம் டிரோந்தியம். இங்கு உள்ள பூங்காவுக்கு வெளியே ஒரு கார் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது.

ஆஸ்லோ,

17 வயது சிறுவன் ஒருவன் அந்த காரை திருட முயன்றான். இதற்காக அவன் காருக்குள் ஏறி அமர்ந்தான். பின்னர் அவன் காரின் கதவை திறக்க முயன்றபோது, அது திறக்கவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் காரில் இருந்து எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என ஏதேதோ செய்தான்.

ஆனால் அவனது முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. பின்னர் என்ன செய்வதென்று தெரியாத சிறுவன், தனது செல்போனில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு தான் காருக்குள் சிக்கி இருப்பதை கூறினான்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காரில் இருந்து சிறுவனை மீட்டனர். அதன் பின்னர்தான் அவன் காரை திருட முயன்று, காருக்குள் சிக்கிக்கொண்டது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவனை கைது செய்தனர்.


Next Story