வங்காளதேச தேர்தல்; அரசு அமைப்பதற்கான தொகுதிகளை கைப்பற்றியது பிரதமர் ஹசீனாவின் கூட்டணி


வங்காளதேச தேர்தல்; அரசு அமைப்பதற்கான தொகுதிகளை கைப்பற்றியது பிரதமர் ஹசீனாவின் கூட்டணி
x
தினத்தந்தி 31 Dec 2018 1:42 AM GMT (Updated: 31 Dec 2018 4:50 AM GMT)

வங்காளதேச நாடாளுமன்ற தேர்தலில் ஷேக் ஹசீனாவின் கூட்டணி, அரசு அமைப்பதற்கான 151க்கும் கூடுதலான தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.

டாக்கா,

வங்காளதேச நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் மற்றும் முன்னாள் பிரதமரான கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி ஆகிய 2 கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி உள்ளது.

இங்கு மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.  இதில், 1,848 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.  வாக்கு பதிவானது 40 ஆயிரத்து 183 மையங்களில் நடைபெற்றது.

இந்த நிலையில், ஆளும் அவாமி லீக் கட்சி மற்றும் வங்காளதேச தேசியவாத கட்சி (பி.என்.பி.) ஆதரவாளர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது.  இந்த சம்பவத்தில் 17 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், ஹசீனாவின் ஆளும் அவாமி லீக் கூட்டணி, அரசு அமைப்பதற்கு தேவையான 151க்கும் கூடுதலான தொகுதிகளை கைப்பற்றி உள்ளது என தேர்தல் செய்திகளை வெளியிட்டு வரும் உள்ளூர் தொலைக்காட்சியான சேனல் 24 தெரிவித்து உள்ளது.

இந்த தேர்தலில் நள்ளிரவு தகவலின்படி அவாமி லீக் கூட்டணியானது 191 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என தெரிய வந்துள்ளது.  இதனால் ஷேக் ஹசீனா தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைத்திடுவார் என கூறப்படுகிறது.

Next Story