ஆஸ்திரேலியா: புத்தாண்டை பிரமாண்டமாக வரவேற்ற மக்கள்


ஆஸ்திரேலியா: புத்தாண்டை பிரமாண்டமாக வரவேற்ற மக்கள்
x
தினத்தந்தி 31 Dec 2018 6:17 PM GMT (Updated: 31 Dec 2018 6:17 PM GMT)

2019ம் வருட புத்தாண்டை பிரமாண்டமான முறையில் ஆஸ்திரேலியா மக்கள் வரவேற்றனர்.

கான்பெர்ரா,

இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறந்ததையடுத்து, அந்நாட்டு மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

உலகம் முழுவதும் 2019ம் ஆண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நள்ளிரவும் 12 மணிக்கு புத்தாண்டை சிறப்பிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இந்திய நேரப்படி 6.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா மக்கள் கோலாகலமாக தங்களது புத்தாண்டை வரவேற்றனர்.

இதில் கண்ணை கவரும் வகையில் வாணவேடிக்கைகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளோடு புத்தாண்டை வரவேற்றனர்.

முன்னதாக நியூசிலாந்தில், இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணியளவில் (அங்கு நள்ளிரவு 12 மணி) 2019-ம் ஆண்டு பிறந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story