உலக செய்திகள்

ரஷியாவில் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்வு + "||" + Death toll jumps to 37 in Russian gas blast

ரஷியாவில் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்வு

ரஷியாவில் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்வு
ரஷியாவில் சிலிண்டர் வெடித்து விபத்து நேரிட்டதில் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
மாஸ்கோ,

ரஷியாவின் உரால் பிராந்தியத்துக்கு உட்பட்ட மக்னிடோகோரஸ்க் நகரத்தில் 10 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி முழுவதுமாக இடிந்து விழுந்து தரைமட்டமானது.  அதனை தொடர்ந்து போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 21 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டது.  35 மணி நேரத்துக்கு பிறகு பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. 2 குழந்தைகள் உள்பட 6 பேர் மீட்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சடலங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 6 பேர் சிறுவர்கள் என அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 4 பேரை காணவில்லை. இடிந்து விழுந்தது சோவியத் கால கட்டிடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 35 அப்பார்ட்மெண்ட் இடிந்து விழுந்தது பலரை வீடு இல்லாத நிலைக்கு தள்ளியுள்ளது. கடும் குளிரில் தவித்து வரும் மக்களுக்கு தேவையான நடவடிக்கையை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷிய ராணுவ முகாமில் ராக்கெட் பரிசோதனை செய்த போது வெடிவிபத்து இருவர் உயிரிழப்பு
ரஷியாவில் ராணுவ முகாமில் ராக்கெட்டை பரிசோதனை செய்த போது வெடிவிபத்து நேரிட்டதில் இருவர் உயிரிழந்தனர்.
2. ரஷியாவில் மின் கசிவால் 3 அணு உலைகள் செயலிழப்பு
ரஷியாவில் மின் கசிவால் 3 அணு உலைகள் செயலிழந்தன.
3. ரஷியாவில் சாலையில் உலாவிய புலியால் பரபரப்பு
ரஷியாவில் சாலையில் உலாவிய புலியால் பரபரப்பு ஏற்பட்டது.
4. ரஷியாவிடம் ஆயுதம் வாங்கும் விவகாரம் எங்கள் தேச நலனுக்கானதை செய்வோம் அமெரிக்காவிற்கு இந்தியா பதில்
ரஷியாவிடம் ஆயுதம் வாங்கும் விவகாரத்தில் எங்கள் தேச நலனுக்கானதை செய்வோம் என அமெரிக்காவிற்கு இந்தியா பதிலை கொடுத்துள்ளது.
5. உலகைச் சுற்றி...
ரஷியாவின் கோமன்டர்ஸ்கை தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.