உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 6 Jan 2019 10:45 PM GMT (Updated: 6 Jan 2019 6:59 PM GMT)

லிபியா தலைநகர் திரிபோலியில் உள்ள துறைமுகத்துக்கு அருகே சரக்கு கப்பல் ஒன்று கடலில் கவிழ்ந்தது.


*வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ வருகிற 10-ந்தேதி, 2-வது முறையாக அந்நாட்டின் அதிபராக பதவி ஏற்கிறார். ஆனால் அவர் தேசிய அரசியலமைப்பு சட்டசபை முன்பு பதவி ஏற்காமல், அந்நாட்டின் சுப்ரீம் கோட்டின் முன்னிலையில் பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* அமெரிக்காவின் முன்னாள் ராணுவ மந்திரி ஹரோல்டு பிரவுன் புற்றுநோய் தாக்கி இறந்தார். அவருக்கு வயது 91.

* ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ராணுவ வீரர்கள் சென்ற ஒரு வாகனம் பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியில் சிக்கி வெடித்து சிதறியது. இதில் ராணுவவீரர்கள் 3 பேர் பலியாகினர்.

* சிரியாவின் அலெப்போ நகரில் அல்கொய்தா ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் கடுமையான மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலில் கடந்த 5 நாட்களில் மட்டும் கிளர்ச்சியாளர்கள் 120 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் டோரன்ஸ் நகரில் உள்ள ‘ஸ்னோ பவுலிங்’ மையத்தில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூட்டில் 3 வாலிபர்கள் உயிர் இழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

* சிரியாவில் டெயிர் அல் ஜோர் மாகாணத்தில் குர்து இன போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளின் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் குர்து இன போராளி ஒருவர் உயிர் இழந்தார். மேலும் இங்கிலாந்தை சேர்ந்த 2 ராணுவவீரர்கள் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

* லிபியா தலைநகர் திரிபோலியில் உள்ள துறைமுகத்துக்கு அருகே சரக்கு கப்பல் ஒன்று கடலில் கவிழ்ந்தது. எனினும் சரக்கு கப்பலில் இருந்த இந்தியாவை சேர்ந்த கப்பல் ஊழியர்கள் 14 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

* அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் தலைமை அதிகாரியான கெவின் சுவின்னே திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.


Next Story