உலகின் மூத்த மனிதரான ஜப்பானின் மசாசோ காலமானார்


உலகின் மூத்த மனிதரான ஜப்பானின் மசாசோ காலமானார்
x
தினத்தந்தி 20 Jan 2019 6:32 PM GMT (Updated: 20 Jan 2019 6:32 PM GMT)

உலகில் மூத்த மனிதரான ஜப்பானின் மசாசோ நோனாக்கா நேற்று காலமானார்.

டோக்கியோ,

உலகின் மூத்த மனிதராகக் அறிவிக்கப்பட்ட ஜப்பானின் மசாசோ நோனாகா, தன் 113 வயதில் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

1905-ம் ஆண்டு, ஜப்பான் நாட்டு தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 900 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஹொக்கைடோ தீவில் பெரிய கூட்டுக்குடும்பத்தில் பிறந்தவர் மசாசோ நோனாகா.

நான்கு தலைமுறைகளை பார்த்த இவர், கடந்த ஆண்டு 112 வயதில் உலகின் மூத்த மனிதராக கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டார். மசாசோவுக்கு 6 சகோதரர்களும், 1 சகோதரியும் உள்ளனர். மசாசோ 1931-ல் ஹட்சுனோ என்பவரை மணந்தார். இந்த தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், மசாசோ நோனாக்கா உடல்நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Next Story