6 மாதங்களில் 2-வது முறையாக இந்தியா வருகிறார், இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ராஜபக்சே


6 மாதங்களில் 2-வது முறையாக இந்தியா வருகிறார், இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ராஜபக்சே
x
தினத்தந்தி 8 Feb 2019 7:02 AM GMT (Updated: 8 Feb 2019 7:02 AM GMT)

6 மாதங்களில் 2-வது முறையாக இலங்கை எதிர்கட்சித்தலைவர் ராஜபக்சே இந்தியா வருகை தர உள்ளார்.

கொழும்பு,

இலங்கை எதிர்க்கட்சித்தலைவர் ராஜபக்சே இந்தியா வருகை தர உள்ளார். இந்த தகவலை அவரது அலுவலகம் உறுதி செய்துள்ளது. இலங்கை எதிர்க்கட்சித் தலைவராக கடந்த மாதம் ராஜபக்சே நியமிக்கப்பட்ட பிறகு, அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப்பயணம் இதுவாகும். வெள்ளிக்கிழமை அலுவல் ரீதியாக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக இலங்கை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது. 

பெங்களூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் இலங்கை - இந்திய உறவுகள் குறித்து ராஜபக்சே உரையாற்ற உள்ளார். கடந்த ஆறு மாதங்களில் ராஜபக்சே இந்தியா வருவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா வருகை தந்த ராஜபக்சே, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

இதைத்தொடர்ந்து சில நாட்களில், இலங்கை பிரதமராக ராஜபக்சே சர்ச்சைக்குரிய வகையில் பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து இலங்கையில் சுமார் 50 நாட்கள் அரசியல் நெருக்கடி நிலவியது. அதன்பிறகு, அந்நாட்டு உச்சநீதிமன்றம் தலையிட்டு ரனில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக பதவியேற்க வழிவகுத்தது. இதன்பிறகு, யாரும் எதிர்பாரத வகையில் மீண்டும் இலங்கை எதிர்க்கட்சி தலைவராக ராஜபக்சே பதவியேற்றுக்கொண்டுள்ளார்.

Next Story