இந்திய விமானி அபிநந்தனை விடுதலை செய்வதை எதிர்த்து பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு


இந்திய விமானி அபிநந்தனை விடுதலை செய்வதை எதிர்த்து பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு
x
தினத்தந்தி 1 March 2019 9:22 AM GMT (Updated: 1 March 2019 9:22 AM GMT)

இந்திய விமானி அபிநந்தனை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்,

சமாதானத்துக்கான விருப்பத்தில், நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் காவலில் உள்ள இந்திய விமானப்படை அதிகாரி நாளை (இன்று) விடுதலை செய்யப்படுவார் என்று இம்ரான்கான் நேற்று அறிவித்தார். இதனையடுத்து இந்திய விமானி அபிநந்தன் இன்று மாலை 4 மணிக்கு வாகா எல்லைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அவரை விடுதலை செய்யக்கூடாது என பாகிஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை விமானி பாகிஸ்தான் வான் எல்லையை தாண்டி குண்டு வீசுவதற்காக வந்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக குற்றம் புரிந்துள்ளார். அவர் இங்கு விசாரணையை எதிர்க்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் நீதிமன்றமும் விசாரணைக்கு மனுவை ஏற்றுக்கொண்டது என செய்திகள் வெளியாகியுள்ளது.

Next Story