பாலியல் குற்றச்சாட்டு எதிரொலி: மைக்கேல் ஜாக்சன் பாடல்கள் ஒலிபரப்பை நிறுத்திய ‘பிபிசி’ ரேடியோ


பாலியல் குற்றச்சாட்டு எதிரொலி: மைக்கேல் ஜாக்சன் பாடல்கள் ஒலிபரப்பை நிறுத்திய ‘பிபிசி’ ரேடியோ
x
தினத்தந்தி 4 March 2019 11:00 PM GMT (Updated: 4 March 2019 7:25 PM GMT)

பாலியல் குற்றச்சாட்டு எதிரொலியாக, மைக்கேல் ஜாக்சன் பாடல்களின் ஒலிபரப்பை பிபிசி ரேடியோ நிறுத்தியது.

வாஷிங்டன்,

‘பாப்’ பாடல் உலகின் மன்னராக திகழ்ந்தவர் அமெரிக்க பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன். இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் காலமானார்.

இந்த நிலையில் மைக்கேல் ஜாக்சனின் இசைக்குழுவில் பணியாற்றிய வேட் ராப்சன், ஜேம்ஸ் சேவ்சக் ஆகிய இருவர், சிறுவர்களாக இருந்தபோது மைக்கேல் ஜாக்சன் பலமுறை தங்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக சமீபத்தில் குற்றம் சாட்டினர்.

இதுதொடர்பாக ‘லீவிங் நெவர்லேண்ட்’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட ஒரு ஆவணப்படம் ஆங்கில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. மைக்கேல் ஜாக்சனின் உறவினர்கள் அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுத்ததோடு, அந்த ஆவணப்படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்த பாலியல் குற்றச்சாட்டின் எதிரொலியாக மைக்கேல் ஜாக்சனின் பாடல்களை ஒலிபரப்புவதை ‘பிபிசி’ ரேடியோ நிறுத்திவிட்டது. கடந்த மாதம் 24-ந் தேதிக்கு பிறகு ‘பிபிசி’ ரேடியோவில் மைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் ஒலிபரப்பப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story