ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத் தலைவர் மசூத் அசாரின் சொத்துக்களை முடக்கியது பிரான்சு


ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத் தலைவர் மசூத் அசாரின் சொத்துக்களை முடக்கியது பிரான்சு
x
தினத்தந்தி 15 March 2019 7:43 AM GMT (Updated: 15 March 2019 11:10 AM GMT)

ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத் தலைவர் மசூத் அசாரின் சொத்துக்களை பிரான்சு அரசு முடக்கியது.

பாரிஸ்,

பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்- இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து தடை விதிக்க ஐ.நா. மூலம் இந்தியா நீண்ட காலமாக முயன்று வருகிறது. இதற்கு சீனா தொடர்ந்து தடையாக இருந்து வருகிறது. எனினும் புல்வாமா தாக்குதலுக்குப்பின் மீண்டும் அந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.

அதன்படி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன. இது நிறைவேறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீனா மீண்டும் ஒருமுறை அதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதனால் அந்த தீர்மானம் நிறைவேறாமல் போய்விட்டது. இது இந்தியா மட்டும் அல்லாது, இந்த தீர்மானத்தை முன்மொழிந்த நாடுகளுக்கும் கடும் அதிருப்தியை தந்தது. 

இந்த நிலையில், பிரான்சில் உள்ள மசூத் அசார் சொத்துக்களை  முடக்குவதாக பிரான்சு அரசு அறிவித்துள்ளது. பிரான்சு உள்துறை அமைச்சகம், நிதி அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவை வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டது. ஐரோப்பிய யூனியன் பயங்கரவாதத்தில் ஈடுபடும் நபர்கள் பட்டியலில் மசூத் அசாரை இணைப்பது தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாகவும் பிரான்சு தெரிவித்துள்ளது. 

Next Story