பாகிஸ்தான் எல்லை தாண்டிய தாக்குதல்களையும் தீவிரவாதிகளை வளர்ப்பதையும் நிறுத்த வேண்டும்- அமெரிக்கா


பாகிஸ்தான் எல்லை தாண்டிய தாக்குதல்களையும் தீவிரவாதிகளை வளர்ப்பதையும் நிறுத்த வேண்டும்- அமெரிக்கா
x
தினத்தந்தி 16 March 2019 5:40 AM GMT (Updated: 16 March 2019 8:25 AM GMT)

பாகிஸ்தான் எல்லை தாண்டிய தாக்குதல்களையும் தீவிரவாதிகளை வளர்ப்பதையும் நிறுத்த வேண்டும் என அமெரிக்கா கூறி உள்ளது.

வாஷிங்டன்

கடந்த புதன்கிழமை வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே உடனான ஒரு சந்திப்பில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் இந்தியாவிற்கு அமெரிக்காவின் ஆதரவை தெரிவித்தார்.

பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக "உறுதியான மற்றும் மீறமுடியாத நடவடிக்கை" எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் அமெரிக்காவும் இந்தியாவும் கேட்டுக் கொண்டன.

அமெரிக்கா இந்தியாவுக்கு  ஆதரவு தெரிவித்த அடுத்த நாள் ஜெய்ஷ்-இ-முகம்மது (ஜெ.எம்.எம்) தலைவர் மசூத் அசார் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவால் உலகளாவிய பயங்கரவாதியாக நியமிக்கப்படுவதற்கு இந்தியாவின் முயற்சியை சீனா தடுத்து நிறுத்தியது கு
றி
ப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்ப்போ கூறியதாவது:-

பாகிஸ்தான் தீவிரவாதிகளால்  கடந்த பிப்ரவரி 14 ந்தேதி  இந்தியாவில் என்ன நடந்தது  என்பதை நாங்கள் கண்டோம். தீவிரவாதிகளை   வளர்ப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். 

டொனால்டு டிரம்ப் நிர்வாகம் பாகிஸ்தானுக்கு எதிராக வேறு எந்த முந்தைய அரசாங்கங்களும் எடுக்காத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகளை தடுத்து நிறுத்துவதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என கூறினார்.

Next Story