உலக செய்திகள்

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க முக்கிய பங்காற்றினோம் -ஐக்கிய அரபு எமிரேட்ஸ் + "||" + We have played an important role in reducing tensions between India and Pakistan UAE Envoy to India

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க முக்கிய பங்காற்றினோம் -ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க முக்கிய பங்காற்றினோம் -ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க முக்கிய பங்காற்றினோம் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் சென்று இந்திய விமானப்படை விமானங்கள் பிப்ரவரி 26-ம் தேதி பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசியது. இதனையடுத்து இருநாடுகள் இடையே போர் பதற்றம் நிலவியது. உலக நாடுகள் இருநாடுகளும் அமைதி காக்க வேண்டும், கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தின. இதனையடுத்து எல்லையில் நிலை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியது.

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க முக்கிய பங்காற்றினோம் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது. 

இந்தியாவிற்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதர் டாக்டர் அகமது அல் பன்னா பேசுகையில்,, “இந்தியா பாகிஸ்தான் இடையிலான பதட்டத்தை தணிக்க நாங்கள் மிகவும் முக்கியமான பணியை மேற்கொண்டோம். இருதரப்பு இடையேயும் கொந்தளிப்பு காணப்பட்டபோது எங்களுடைய இளவரசர் பிரதமர் மோடி மற்றும் இம்ரான்கானிடம் பேசினார். சமாதானமாக வேறுபாடுகளை தீர்த்து வைக்கவே நாங்கள் முயற்சியை மேற்கொண்டோம். இருதரப்பு இடையே நாங்கள் மத்தியஸ்தம் செய்யவில்லை. இரு நாடுகளிடம் நாங்கள் கோரிக்கைகளைதான் வைத்தோம். நாங்கள் கொண்டிருக்கும் சிறப்பு உறவு மூலமாக இருநாடுகள் இடையே பதற்றத்தை தணிக்க முயற்சி செய்தோம்,” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்
காஷ்மீர் விவகாரம் முற்றிலும் இந்தியாவின் உள் விவகாரம் என்று ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநித் கூறினார்.
2. இந்தியாவின் அணு ஆயுத கொள்கையில் எதிர்காலத்தில் மாற்றம் வரலாம் - ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் சூசகம்
இந்தியாவின் அணு ஆயுத கொள்கையில் எதிர்காலத்தில் மாற்றம் வரலாம் என ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் சூசகமாக உணர்த்தி உள்ளார்.
3. காஷ்மீர் விவகாரம்- ஐ.நா.வில் ரகசிய ஆலோசனை
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று ரகசிய ஆலோசனை நடைபெற உள்ளது.
4. இந்திய சினிமாக்களின் திருட்டி விசிடிக்கள் விற்பனை அதிகரிப்பு: சோதனையை மேற்கொள்கிறது பாகிஸ்தான்
இந்திய சினிமாக்களின் திருட்டி விசிடிக்கள் விற்பனை அதிகரிப்பை அடுத்து பாகிஸ்தான் சோதனையை மேற்கொள்கிறது.
5. ஈரான் எண்ணெய் கப்பலில் இருந்த இந்திய சிப்பந்திகள் விடுதலை
ஜிப்ரால்டரில் சிறை பிடிக்கப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பலில் இருந்த இந்திய சிப்பந்திகள் விடுவிக்கப்பட்டனர்.