உலக செய்திகள்

பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் கட்டாய திருமணம் செய்த இந்திய பெண்ணின் கதை திரைப்படமாகிறது + "||" + In Pakistan At the tip of the gun made forced marriage Indian woman's story becomes a movie

பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் கட்டாய திருமணம் செய்த இந்திய பெண்ணின் கதை திரைப்படமாகிறது

பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் கட்டாய திருமணம் செய்த இந்திய பெண்ணின் கதை திரைப்படமாகிறது
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட இந்தியாவை சேர்ந்த இளம்பெண் பிரச்சினைகளில் இருந்து மீண்டு தன்னுடைய வாழ்க்கையை புதிதாக தொடங்கியுள்ளார்.
இந்திய பெண்ணான உஸ்மா பாகிஸ்தானை சேர்ந்த தஹிர் அலி என்பவரை இரண்டாண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் சந்தித்தார். இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கிய நிலையில் பாகிஸ்தான் சென்ற தஹிரை காண உஸ்மா அங்கு சென்றார்.அப்போது தஹிருக்கு ஏற்கனவே திருமணமாகி 4 குழந்தைகள் இருப்பதை கண்டுப்பிடித்த உஸ்மா அதிர்ச்சியடைந்தார்.

இதன்பின்னர் துப்பாக்கி முனையில் தஹிரை திருமணம் செய்து கொள்ள உஸ்மா வற்புறுத்தப்பட்ட நிலையில் திருமணமும் நடந்தது. இதன் பின்னர் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை உஸ்மா அனுபவித்த நிலையில் இந்திய ஹைகமிஷன்  உதவியை அவர் நாடினார்.

இதையடுத்து 2017 மே மாதம் 25ஆம் தேதி இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார் உஸ்மா. இந்நிலையில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி நிகழ்வுகளிலிருந்து மீள 2 ஆண்டுகள் ஆனதாக கூறும் உஸ்மா தற்போது புதிதாக தனது வாழ்க்கையை தொடங்கியுள்ளார். அதன்படி, தற்போது டெல்லியில் அழகு நிலையம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். 

இரண்டு ஆண்டுகளாக மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அதிலிருந்து மீண்டுவந்து இந்தியாவில் புதிய வாழ்க்கையைத் தொடங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தம்மைப் போன்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ தாம் தயாராக இருப்பதாகவும், இதற்காக அமைப்பு ஒன்றை ஏற்படுத்தியிருப்பதாகவும் உஸ்மா தெரிவித்தார்.

உஸ்மாவின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் ஒன்றும் தயாராகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவின் முதல் புகைப்படம் ஏலம்
இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவின் முதல் புகைப்படம் இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
2. நிறைமாத கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து வயிற்றை கிழித்து குழந்தை திருடிய கும்பல்
நிறைமாத கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து, அவருடைய வயிற்றை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்துள்ள அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
3. மனைவியின் கருப்பையில் பைக்கின் உதிரிபாகம்: கணவர் கைது!
பெண்ணின் கருப்பையில் பைக்கின் உதிரிபாகம் இருந்ததால் அவருடைய கணவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
4. குளிர்ச்சியில் இருந்து மின்சாரம் விஞ்ஞானிகள் சாதனை
குளிர்ச்சியில் இருந்து மின்சாரம் எடுத்து விஞ்ஞானிகள் சாதனை புரிந்து உள்ளனர்.
5. மணப்பெண்ணை கட்டிப்பிடித்த மாப்பிள்ளை தோழன் கடுப்பான மாப்பிள்ளை
மணமேடையில் மணப்பெண்ணை கட்டிப்பிடித்த மாப்பிள்ளை தோழன் கடுப்பான மாப்பிள்ளை அவரை சரமாரியாக தாக்கி உள்ளார்.