இலங்கை குண்டுவெடிப்புக்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கண்டனம்


இலங்கை குண்டுவெடிப்புக்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கண்டனம்
x
தினத்தந்தி 22 April 2019 11:00 PM GMT (Updated: 22 April 2019 8:21 PM GMT)

இலங்கை குண்டுவெடிப்புக்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்,

இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்கள் என பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் சுமார் 300 பேர் உயிரிழந்ததுடன், ஏராளமானோர் படுகாயங்களுடன் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈஸ்டர் பெருநாளில் இலங்கையை உலுக்கி உள்ள இந்த சம்பவத்துக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. மேலும் பல்வேறு தலைவர்கள் இரங்கலும், கண்டனமும் தெரிவித்து உள்ளனர். அந்தவகையில் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அன்பு, மீட்பு மற்றும் புதுப்பித்தலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனிதமான நாளில் நடந்திருக்கும் இந்த தாக்குதல், மனிதநேயத்தின் மேல் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இந்த குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாம் பிரார்த்திப்பதுடன், இலங்கை மக்களுக்கு துணையாகவும் நிற்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

Next Story