உலக செய்திகள்

நியூசிலாந்து மசூதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பழிவாங்க இலங்கையில் தாக்குதல் : அமைச்சர் தகவல் + "||" + Probe Shows Sri Lanka Attacks Retaliation for New Zealand Mosque Shootings

நியூசிலாந்து மசூதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பழிவாங்க இலங்கையில் தாக்குதல் : அமைச்சர் தகவல்

நியூசிலாந்து மசூதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பழிவாங்க இலங்கையில் தாக்குதல்  : அமைச்சர் தகவல்
நியூசிலாந்து மசூதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பழிவாங்கவே இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என இலங்கை துணை பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சில் மார்ச் மாதம் 15-ம் தேதி இரு மசூதிகளில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். கிறிஸ்தவ வலதுசாரி அமைப்பினர் இத்தாக்குதலை நடத்தினர் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு அதற்கான பழிவாங்கல் செயலாகும் என தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு சிறப்பு பாராளுமன்றக் கூட்டம் தொடங்கியுள்ளது.

இலங்கை பாதுகாப்பு துறை அமைச்சர் ருவான் விஜேவர்த்தனே பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ள தகவலில், “நியூசிலாந்து மசூதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக ஞாயிறு அன்று இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. ராமநாதபுரம் அருகே பரபரப்பு: இலங்கைக்கு கடத்த துப்பாக்கி - தோட்டாக்களை வீட்டில் பதுக்கிய பெண் - கைது செய்து தீவிர விசாரணை
இலங்கைக்கு கடத்து வதற்காக துப்பாக்கி, 32 தோட்டாக்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடந்தது.
2. இருக்கையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்
சபாநாயகர் தன் இருக்கையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
3. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி அபார வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 268 ரன்கள் இலக்கு: வெற்றியை நோக்கி இலங்கை அணி
காலே டெஸ்டில் நியூசிலாந்து நிர்ணயித்த 268 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடும் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 133 ரன்கள் சேர்த்து வெற்றியை நோக்கி பயணிக்கிறது.
5. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி 267 ரன்னில் ‘ஆல்-அவுட்’
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 267 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.