‘வெடிகுண்டு வெடிக்க வாய்ப்பு’ என எச்சரிக்கை : அதிஉயர் உஷார் நிலையில் கொழும்பு


‘வெடிகுண்டு வெடிக்க வாய்ப்பு’ என எச்சரிக்கை : அதிஉயர் உஷார் நிலையில் கொழும்பு
x
தினத்தந்தி 25 April 2019 1:28 PM GMT (Updated: 25 April 2019 1:28 PM GMT)

வெடிகுண்டு வெடிக்க வாய்ப்பு என எச்சரிக்கப்பட்டதை அடுத்து கொழும்பு நகரம் அதிஉயர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.


கொழும்பு நகரில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வெடிகுண்டு வெடிக்க வாய்ப்பு என எச்சரிக்கப்பட்டதை அடுத்து கொழும்பு நகரம் அதிஉயர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் வாகன சோதனை தொடர்ந்து நடக்கிறது. மக்கள் அமைதியாக இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சோதனை என்பது தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும் என போலீஸ் தரப்பு தகவல் தெரிவிக்கிறது.

இன்று காலை பல்வேறு நிறுவனங்களில் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

இலங்கையில் கடந்த 21–ந் தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு உள்நாட்டு பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது. தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
 
இதற்கிடையே, அவசர நிலையை பயன்படுத்தி, சந்தேகத்துக்குரியவர்களுக்கு எதிராக தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அதிகாலை நடந்த வேட்டையில், மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவருக்கு பயங்கரவாத இயக்கத்துடன் நேரடி தொடர்பு உள்ளதாக கருதப்படுகிறது. இத்துடன் சேர்த்து கைதானவர்கள் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் அமல்படுத்தப்பட்டுள்ள அவசர நிலைக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஓட்டெடுப்பு எதுவும் இல்லாமலேயே ஒப்புதல் அளிக்கப்பட்டது.


Next Story