உலக செய்திகள்

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறப்பதற்கான தடை நீட்டிப்பு + "||" + Pakistan's Airspace To Remain Shut For Indian Flights Till May 30

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறப்பதற்கான தடை நீட்டிப்பு

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறப்பதற்கான தடை நீட்டிப்பு
இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறப்பதற்கான தடையை இம்ரான்கான் அரசு இம்மாத இறுதிவரை நீடித்துள்ளது.
இஸ்லாமாபாத்

காஷ்மீரின் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக இந்திய விமானப்படை விமானங்கள் கடந்த பிப்ரவரி 26 ம் தேதி பாகிஸ்தான் வான் எல்லைக்குள் புகுந்து தீவிரவாதிகளின் முகாம்கள் மீது குண்டுவீசி தாக்கி அழித்தன.

இதையடுத்து இந்திய பயணிகள் விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் பறக்க அந்நாடு தடைவிதித்துள்ளது. இதற்கிடையே இந்த தடையை இந்த மாதம் 30 ம் தேதிவரை நீட்டிக்க பாகிஸ்தான் ராணுவம் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரான்சில் ரபேல் அலுவலகத்தை உடைத்து ஆவணங்கள் திருட முயற்சி
பிரான்சில் ரபேல் விமான நிறுவனத்தின் அலுவலகத்தை உடைத்து ஆவணங்கள் திருட முயற்சி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. குஜராத் கடற்கரையில் 200 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
குஜராத் கடற்கரையில் 200 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக மொய்ன் உல் ஹக் நியமனம்
இந்தியாவுக்கான தனது தூதராக மொய்ன் உல் ஹக் என்பவரை பாகிஸ்தான் நியமித்துள்ளது.
4. எப்-16 போர் விமானங்களை எல்லையில் பல்வேறு இடங்களில் நிறுத்தி உள்ள பாகிஸ்தான்
பாலகோட் விமானப்படை தாக்குதலுக்கு பின்னர் எப்-16 போர் விமானங்களை எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் குவித்துள்ளது.
5. பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: கடைசி ஆட்டத்திலும் இங்கிலாந்து வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், கடைசி ஆட்டத்திலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.