டிரம்ப் இங்கிலாந்து பயணம்: அரசி எலிசபெத்துடன் சந்திப்பு


டிரம்ப் இங்கிலாந்து  பயணம்: அரசி எலிசபெத்துடன் சந்திப்பு
x
தினத்தந்தி 3 Jun 2019 12:31 PM GMT (Updated: 3 Jun 2019 12:31 PM GMT)

இங்கிலாந்து பயணத்தின் போது, டிரம்புக்கு எதிராக ராட்சத பலூன் பறக்கவிட்டு போராட்டம் நடத்த சிலர் திட்டமிட்டடுள்ளனர்.

லண்டன்,

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது மனைவியுடன் ஜூன் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் டிரம்புக்கு எதிராக லண்டன், மான்செஸ்டர், பெல்பாஸ்ட், பிர்மிங்ஹாம் , நாட்டிங்ஹாம் உள்பட இங்கிலாந்து  முழுவது போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

அந்த போராட்டத்தின் போது, டிரம்ப்பை கோவமான குழந்தை போல சித்தரிக்கும் பெரிய ராட்சத பலூன் ஒன்றை அவர்கள் பறக்கவிட உள்ளனர்.

இங்கிலாந்தில்  பயணம் மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை காலை  ஸ்டான்ஸ்டெட் விமானதளத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டார்.

பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்னால் பிரிட்டனின் அடுத்த பிரதமராக போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவு அளிப்பதாக அதிபர் டிரம்ப் 'த சன்' ஊடக நிறுவனத்திடம் தெரிவித்தார்.

லண்டன் சென்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலினியா டிரம்ப் ஆகியோர் பிரிட்டன் அரசி எலிசபெத்தை சந்தித்தனர். இருவருக்கும் பிரிட்டன் ராணி மதிய விருந்து அளித்தார். தொடர்ந்து  அதிபர் டிரம்ப், இளவரசர் சார்லஸ், கான்வால் சீமாட்டி கமிலா ஆகியோரை சந்தித்தார்.

பிரிட்டனில் பிரபல அமெரிக்கர்கள் கலந்து கொள்ளும் விருந்தினர் கூட்டத்தில் அதிபர் டிரம்பும், எலிசபெத் அரசியும் உரையாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் தெரேசா மேயோடு அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்துவார். 

Next Story