சவுதி அரேபிய மன்னரை அவமதித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்


சவுதி அரேபிய மன்னரை அவமதித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
x
தினத்தந்தி 6 Jun 2019 7:48 AM GMT (Updated: 6 Jun 2019 7:48 AM GMT)

சவுதி அரேபிய மன்னருடனான சந்திப்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மன்னரை அவமரியாதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஈரானுக்கு எதிராக முஸ்லிம் நாடுகளை ஒன்று சேர்க்கும் விதமாக சவுதி அரேபியாவில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்க சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை, சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல்லாஸ் தனது மொழிபெயர்ப்பாளருடன் வரவேற்றார். அப்போது இருவரும் உரையாடிய நிலையில், மன்னரிடம் தெரிவிக்கும்படி மொழிபெயர்ப்பாளரிடம் ஏதோ கூறிவிட்டு இம்ரான் கான் அங்கிருந்து நழுவினார்.

இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகி வரும் நிலையில் இம்ரான் கான்,  மன்னரை அவமரியாதை செய்ததாகவும், கானின் நாகரீகமற்ற செயல் கண்டிக்கத்தக்கது எனவும் பலர் விமர்சித்து வருகின்றனர். இந்நிகழ்வுக்கு பின் நடக்கவிருந்த இரு நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையும் ரத்தானதாக கூறப்படுகிறது.


Next Story