உலக செய்திகள்

வங்கி கணக்கு மோசடி: பாகிஸ்தான் முன்னாள் அதிபரின் சகோதரி கைது + "||" + Faryal Talpur arrested by NAB officials in Islamabad

வங்கி கணக்கு மோசடி: பாகிஸ்தான் முன்னாள் அதிபரின் சகோதரி கைது

வங்கி கணக்கு மோசடி: பாகிஸ்தான் முன்னாள் அதிபரின் சகோதரி கைது
போலி வங்கி கணக்கு தொடங்கி மோசடி செய்ததாக பாகிஸ்தான் முன்னாள் அதிபரின் சகோதரியை போலீசார் கைது செய்தனர்.
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் யுனைடெட் வங்கி மற்றும் சம்மிட் வங்கிகளில் 29 போலி கணக்குகளை தொடங்கி சுமார் 15 கோடி ரூபாய் அளவில் நிதி மோசடியில் பாகிஸ்தானின் முன்னாள் அதிபரும், பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத்தலைவருமான ஆசிப் அலி சர்தாரி, அவரது சகோதரி பர்யால் தல்புர் உள்பட 20 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

 
இந்த மோசடி தொடர்பாக சம்மிட் வங்கி தலைவரும், சர்தாரியின் கூட்டாளியுமான உசேன் லவாய் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இந்த முறைகேடு தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணையை பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் பின்னர் ஏற்றது.

முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் அவரது சகோதரி பர்யால் தல்புர் ஆகியோர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவரது சகோதரி பர்யால் தல்புரையும் போலீசார் இன்று கைது செய்தனர்.