உலக செய்திகள்

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு : பெர்லின் நகர மக்களை வெளியேற்றி செயலிழக்க வைப்பு + "||" + An unexploded American World War II aerial bomb was found in central Berlin

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு : பெர்லின் நகர மக்களை வெளியேற்றி செயலிழக்க வைப்பு

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு : பெர்லின் நகர மக்களை வெளியேற்றி செயலிழக்க வைப்பு
இரண்டாம் உலகப்போர் 1939-1945 ஆண்டுகளில் நடைபெற்றது. அப்போது ஜெர்மனியின் பெர்லின் நகரில் அமெரிக்கா போட்ட 100 கிலோ எடை கொண்ட ராட்சத வெடிகுண்டு வெடிக்காத நிலையில் அலெக்சாண்டர்பிளாட்ஸ் சதுக்கத்தில் கண்டெடுக்கப்பட்டது.

பெர்லின், 

அலெக்சாண்டர்பிளாட்ஸ் சதுக்கத்தில் இது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வெடிகுண்டை செயலிழக்க வைக்க போலீசார் நேற்று அதிகாலை நேரத்தில் நடவடிக்கை எடுத்தனர்.

இதற்காக அந்தப் பகுதியில் வசித்து வந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து அந்த வெடிகுண்டை வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செயலிழக்க வைத்தனர்.

அதிகாலை 1.45 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, எந்த பாதிப்பும் இன்றி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. ஈரான் அணு ஆயுதங்கள் ஏந்தியிருப்பது உலகிற்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்- அமெரிக்கா
யுரேனியம் செறிவூட்டலை அதிகரித்து, அணுசக்தி ஒப்பந்தத்தை மீறியதற்கு, ஈரான் மீது மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ எச்சரித்துள்ளார்.
2. நவிமும்பையில் பள்ளிக்கூடம் அருகே வெடிகுண்டு வைத்த 3 பேர் கைது
நவிமும்பையில் பள்ளிக்கூடம் அருகே வெடிகுண்டு வைத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
3. ஈரான் யுரேனிய மிரட்டல்: கவனமாக இருங்கள் -உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
ஈரானின் யுரேனிய மிரட்டல் குறித்து கவனமாக இருங்கள் என்று உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
4. அமெரிக்காவில் ‘பேஸ்புக்’ அலுவலகத்துக்கு வந்த பார்சலில் ‘நச்சு’
அமெரிக்காவில் ‘பேஸ்புக்’ அலுவலகத்துக்கு வந்த பார்சலில் ‘நச்சு’ பொருள் இருந்துள்ளது.
5. ஆப்கானிஸ்தான் போர் முடிவுக்கு வருமா? அமெரிக்கா-தலீபான்கள் சமரச பேச்சு கத்தாரில் தொடங்கியது
கத்தார் நாட்டில் அமெரிக்காவுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையேயான சமரச பேச்சு தொடங்கியது. இதில் திருப்பம் ஏற்படுமா, ஆப்கானிஸ்தான் போர் முடிவுக்கு வருமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.