சீனா- பாகிஸ்தான் அணு ஆயுதங்களை அதிகரிக்கிறது : இந்தியா அதே நிலையில் உள்ளது


சீனா- பாகிஸ்தான் அணு ஆயுதங்களை அதிகரிக்கிறது : இந்தியா அதே நிலையில் உள்ளது
x
தினத்தந்தி 17 Jun 2019 8:37 AM GMT (Updated: 17 Jun 2019 8:37 AM GMT)

சீனா- பாகிஸ்தான் தங்கள் அணு ஆயுதங்களை அதிகரித்து வருகின்றன. இந்தியா அதே நிலையில் உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

தி ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (சிஐபிஆர்ஐ)  2019 ஆம் ஆண்டு புத்தகத்தை இன்று  வெளியிட்டு உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

பாகிஸ்தானும் சீனாவும் தொடர்ந்து அணு ஆயுதங்களை தயாரித்து வருகின்றன.  கடந்த ஒரு வருடத்தில் அவர்களின்  கையிருப்பு அதிகரித்துள்ளது. 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து  இந்தியா தனது ஆயுதங்களை அதே எண்ணிக்கையில் பராமரித்து வருகிறது.பாகிஸ்தான் தனது ஆயுதக் களஞ்சியத்தில் சுமார் 150-160 அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது.  சீனா 290-ஐ கொண்டுள்ளது. இந்தியாவில் வெறும் 130-140  அணு ஆயுதங்களே உள்ளன.

2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீனா 280 அணுகுண்டுகளை வைத்திருந்தது, ஆனால் இப்போது அதை 290 ஆக உயர்த்தியுள்ளது. இதேபோல் பாகிஸ்தான்  தனது கையிருப்பை  140-150 இல் இருந்து  150-160 வரை உயர்த்தி உள்ளது. இஸ்ரேல் 80 இல் இருந்து  80-90 ஆகவும், வட கொரியா தனது ஆயுதங்களை 10-20 முதல் 20-30 வரை இரட்டிப்பாக்கியுள்ளது.

ஆனால் இந்தியாவில் 130-140 அணு குண்டுகள் உள்ளன. இது 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்த அதே எண்ணிக்கையாகும் என கூறப்பட்டு உள்ளது.

ஆனால் 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 2018 ல் இருந்ததை விட குறைந்து விட்டது என்று சிஐபிஆர்ஐ (SIPRI) ஆண்டறிக்கை கூறுகிறது.

 அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து , பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் கொரிய ஜனநாயகக் குடியரசின் கொரியா (வடகொரியா) ஆகிய நாடுகளில் ஒன்பது நாடுகளில்  சுமார் 13,865 அணு ஆயுதங்கள் உள்ளன. 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்த குண்டுகள் எண்ணிக்கை 14,465.  சுமார் 600 ஆயுதங்கள் குறைந்து உள்ளன.

‘இந்தியாவும் பாகிஸ்தானும் அடுத்த தசாப்தத்தில் தங்கள் அணு ஆயுதங்களின்  அளவுகளில் கணிசமான அதிகரிப்புக்கு வழிவகுக்கும் வகையில் தங்கள் அணு பிளவு பொருள் உற்பத்தி திறன்களை விரிவுபடுத்துகின்றன என அணு ஆயுதக் குறைப்பு, ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் பரவல் அல்லாத திட்டத்தின் இயக்குனர் ஷானன் கெய்ல் கூறி உள்ளார்.
நாடுபயன்பாட்டில் உள்ள ஆயுதம்*மற்ற ஆயுதங்கள்**மொத்தம் 2019மொத்தம்
2018
அமெரிக்கா1 7504 4356 1856 450
ரஷ்யா1 6004 9006 5006 850
இங்கிலாந்து12080200215
பிரான்ஸ்28020300300
சீனா 290290280
இந்தியா 130–140130–140130–140
பாகிஸ்தான் 150–160150–160140–150
இஸ்ரேல் 80-9080–9080
வடகொரியா....(20–30)(10–20)
மொத்தம்3 75010 11513 86514 465



Next Story