உலக செய்திகள்

ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார் + "||" + Osaka, Japan: Prime Minister Narendra Modi departs for New Delhi after attending #G20Summit

ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்

ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்
ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பானில் இருந்து டெல்லி புறப்பட்டார்.
ஒசாகா,

ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு  நடைபெற்றது. ஜி 20 நாடுகள் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியா,  கனடா, ரஷ்யா, அமெரிக்கா, பிரான்சு, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்தில் பங்கேற்க கடந்த  27 ஆம் தேதி ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி. 

ஜப்பான் சென்ற பிரதமர் மோடி, ஒசாகா நகரில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசினார். பின்னர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் பங்கேற்றார். 

ஜி 20 மாநாட்டுக்கு இடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான், துருக்கி அதிபர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இரு தரப்பு ஆலோசனை நடத்தினர்.  பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

இரு நாள்கள் நடைபெற்ற ஜி 20 மாநாடு நிறைவுற்றதையடுத்து, ஜப்பானின் ஒசாகா நகரில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார். 

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடியின் அழைப்பை நிராகரித்தேன் - சரத்பவார் பரபரப்பு பேட்டி
பிரதமர் மோடியின் அழைப்பை நிராகரித்ததாக சரத்பவார் தெரிவித்துள்ளார்.
2. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 7 பேர் டெல்லி விமான நிலையத்தில் கைது
போதைப் பொருட்களை கடத்தியதற்காக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 7 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
கார்டோசாட்-3 செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
4. அரசியல் சட்டம் நமக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு - நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
இந்திய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டதன் 70-வது ஆண்டு தின விழாவையொட்டி நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, அரசியல் அமைப்பு நமக்கெல்லாம் வழிகாட்டும் ஒளிவிளக்கு போன்றது என கூறினார்.
5. டெல்லியை தகர்க்கும் முயற்சி முறியடிப்பு: வெடிபொருட்களுடன் 3 பேர் கைது
டெல்லியை தகர்க்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது. மேலும் அந்த சம்பத்தில் வெடிபொருட்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.