அமெரிக்க பயணத்தில் தூதர் இல்லத்திலேயே தங்க இம்ரான் கான் திட்டம்


அமெரிக்க பயணத்தில் தூதர் இல்லத்திலேயே தங்க இம்ரான் கான்  திட்டம்
x
தினத்தந்தி 8 July 2019 12:19 PM GMT (Updated: 8 July 2019 12:19 PM GMT)

அமெரிக்க பயணத்தின் போது செலவை குறைக்க பாகிஸ்தான் தூதர் இல்லத்திலேயே தங்குவதற்கு இம்ரான் கான் திட்டமிட்டுள்ளார்.

இஸ்லாமாபாத்,

வரும் ஜூலை 21-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் அரசுமுறை பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்கா செல்கிறார்.

பாகிஸ்தான் ஏற்கனவே நிதி நெருக்கடியில் தவித்து வரும் நிலையில், தேவையற்ற செலவினங்களை அவர் குறைத்து வரும் நிலையில், அமெரிக்க பயணத்தின் போதும் ஆடம்பர ஹோட்டலில் தங்குவதில்லை என திட்டமிட்டுள்ளார்.

மாறாக அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதரின் இல்லத்திலேயே 3 நாட்கள் தங்குவதற்கு இம்ரான் கான் முடிவெடுத்துள்ளார்.

Next Story