“நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் கப்பலை விடுவிப்போம்” ஈரானுக்கு, இங்கிலாந்து அறிவுறுத்தல்


“நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் கப்பலை விடுவிப்போம்” ஈரானுக்கு, இங்கிலாந்து அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 15 July 2019 2:15 AM GMT (Updated: 15 July 2019 2:15 AM GMT)

“நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் கப்பலை விடுவிப்போம்” என்று ஈரானிடம் இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

லண்டன்,

ஐரோப்பிய கூட்டமைப்பின் தடையை மீறி சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக ஈரானின் ‘சூப்பர் டேங்கர் கிரேஸ் 1’ என்ற எண்ணெய் கப்பல் ஜிப்ரால்டர் ஜலசந்தியில் இங்கிலாந்து கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டது. இதனால் ஈரான் மற்றும் இங்கிலாந்து இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நிபந்தனைகளின் பேரில் ஈரானின் எண்ணெய் கப்பலை விடுவிக்க தயாராக இருப்பதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜெரேமி ஹண்ட் கூறுகையில், “ஈரானுடனான பிரச்சினையை தீர்க்கவே விரும்புகிறோம். சிரியாவுக்கு எண்ணெய் எடுத்து செல்லமாட்டோம் என உத்தரவாதம் அளித்து, நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் எண்ணெய் கப்பலை விடுவிக்க தயாராக இருக்கிறோம்” என்றார்.

ஆனால் இங்கிலாந்தின் இந்த நிபந்தனையை திட்டவட்டமாக நிராகரித்துள்ள ஈரான் எந்த சூழ்நிலையிலும் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்த முடியாது என தெரிவித்துள்ளது. அத்துடன் சிறைபிடித்து வைத்துள்ள தங்களது எண்ணெய் கப்பலை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் இங்கிலாந்தை ஈரான் வலியுறுத்தி உள்ளது.


Next Story