தங்களுக்கு எதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது? யாஸிடி இன பெண்ணிடம் கேள்வி எழுப்பிய டொனால்டு டிரம்ப்


தங்களுக்கு எதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது? யாஸிடி இன பெண்ணிடம் கேள்வி எழுப்பிய டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 18 July 2019 12:07 PM GMT (Updated: 18 July 2019 12:07 PM GMT)

தங்களுக்கு எதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது? என நோபல் பரிசைப் பெற்ற யாஸிடி இன பெண்களுக்கான செயற்பாட்டாளரிடம் அமெரிக்க அதிபர் கேள்வி எழுப்பினார்.

மதச் சுதந்திரம் எனும் பெயரில் அமெரிக்காவில் 3 நாட்கள் நடந்த மாநாட்டில் போரால் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினர். அவர்களில் கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற யாஸிடி இன பெண்கள் செயற்பாட்டாளர் நாடியா முரத்தும் ஒருவர்.

அங்கு பேசிய போது, தன் குடும்பத்தில் தாயும், தனது 6 சகோதரர்களும் ஐ.எஸ்., தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதாக முராத் கூறியுள்ளார். யாஸிடி இனப் பெண்கள் தீவிரவாதிகளால் கொடூரமாக பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அப்போது குறுக்கிட்ட டிரம்ப் தங்களுக்கு எதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்வியால் சற்று திகைத்து நின்று பின் தன் பேச்சைத் தொடர்ந்த நாடியா, பெண் அகதிகளின் மறுவாழ்வுக்காக தாம் உழைத்ததாக கூறினார்.

Next Story