2024–ம் ஆண்டில் நிலாவுக்கு செல்லும் முதல் பெண் : நாசா அனுப்புகிறது


2024–ம் ஆண்டில் நிலாவுக்கு செல்லும் முதல் பெண் : நாசா அனுப்புகிறது
x
தினத்தந்தி 22 July 2019 11:15 PM GMT (Updated: 22 July 2019 8:09 PM GMT)

நிலாவில் மனிதன் முதல் முறையாக கால் பதித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 2024–ம் ஆண்டு நிலாவுக்கு முதல் பெண் அனுப்பப்படுவார் என அமெரிக்காவின் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

நிலவில் முதல் பெண்ணை தரையிறக்கும் நாசாவின் புதிய திட்டத்திற்கு ‘ஆர்ட்டிமிஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

‘‘2024–ம் ஆண்டில் ‘ஆர்ட்டிமிஸ் 1’ விண்கலம் நாசாவின் ஓரியன் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டு, முதல் பெண் நிலவில் கால் பதிப்பார்’’ என நாசாவின் நிர்வாக அதிகாரி ஜிம் பிரிட்டைன்ஸ்டைன் தெரிவித்தார்.

மேலும், ‘ஆர்ட்டிமிஸ்’ திட்டத்தின் மூலம் விண்வெளி துறையில் அமெரிக்கா மேலும் ஒரு சாதனையை படைக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.


Related Tags :
Next Story