ஈரானின் தெற்கு பகுதியில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.0 ஆக பதிவு


ஈரானின் தெற்கு பகுதியில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.0 ஆக பதிவு
x
தினத்தந்தி 23 July 2019 1:30 AM GMT (Updated: 23 July 2019 1:30 AM GMT)

ஈரானின் தெற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

ஈரானின் தெற்கே ஹார்மோஜ்கன் பகுதியில் வடகிழக்கு நகரான பந்தர் லெங்கேவில் இருந்து 23 கி.மீட்டர்கள் தொலைவில் 10 கி.மீட்டர்கள் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 5.0 ஆக பதிவாகி உள்ளது.

இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.  ஈரான் நாடு பூகம்பம் ஏற்படும் மண்டலத்தில் அமைந்துள்ளது.  சில நேரங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன.  நாட்டின் வடக்கு பகுதியில் கடந்த 856ம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 2 லட்சம் பேர் கொல்லப்பட்டனர்.

Next Story