இந்திய ராணுவத்தின் யுத்த மீறல்கள் அதிகரித்து உள்ளன; இது அவர்களின் விரக்தியை காட்டுகிறது - பாகிஸ்தான்


இந்திய ராணுவத்தின் யுத்த மீறல்கள் அதிகரித்து உள்ளன; இது அவர்களின் விரக்தியை காட்டுகிறது - பாகிஸ்தான்
x
தினத்தந்தி 31 July 2019 11:58 AM GMT (Updated: 31 July 2019 11:58 AM GMT)

இந்திய ராணுவத்தின் யுத்த மீறல்கள் அதிகரித்து உள்ளன. இது அவர்களின் விரக்தியை காட்டுகிறது என பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பு இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

இஸ்லாமாபாத்,

ஆசாத் ஜம்மு-காஷ்மீரில் (ஏ.ஜே.கே) வெவ்வேறு கிராமங்களில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதன் விளைவாக இந்திய துருப்புக்கள் சமீபத்தில் மேற்கொண்ட போர்நிறுத்த மீறலை கண்டனம் செய்ததாக இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ஐ.எஸ்.பி.ஆர்) புதன்கிழமை தெரிவித்துள்ளது.

எல்லை கட்டுப்பாட்டுக் கோடு வழியாக இந்திய ராணூவ தாக்குதல்களின் அதிகரிப்பு என்பது  தோல்வியால் அவர்களின் விரக்தியை குறிக்கிறது என்று கூறி உள்ளது.

வேண்டுமென்றே குறிவைத்து அப்பாவி பொதுமக்களை இந்தியா கட்டுப்பாடற்று சுட்டு வருகிறது.  இந்திய துப்பாக்கிச் சூட்டில் இருந்து பாதுகாக்க பாகிஸ்தான் இராணுவம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று கூறி உள்ளது.

கடுமையான துப்பாக்கிச் சூடு காரணமாக எல்லை கட்டுப்பாடு அருகில் பணிபுரிந்த 50க்கும் மேற்பட்ட சீன நாட்டினரை பாகிஸ்தான்அதிகாரிகள் வெளியேற்றி உள்ளனர். இவர்கள் அனைவரும் அங்குள்ள அணை கட்டும் பனியில் ஈடுபட்டு வந்தனர் என உள்ளூர் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அக்தர் அயூப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்ட ஒரு ட்வீட்டில், இராணுவத்தின் ஊடகப் பிரிவின் இயக்குநர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர், " இந்தியப் படைகளின் போர்நிறுத்த மீறல்கள் நடந்து கொண்டிருக்கின்றன, எப்போதும் திறம்பட பதிலளிக்கப்படும்" என கூறினார்.
வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் டாக்டர் முகமது பைசல் இன்று இந்திய துணை தூதர் கவ்ரவ் அலுவாலியாவை வரவழைத்து, "தூண்டப்படாத" யுத்த நிறுத்த மீறல்கள் குறித்து கண்டித்துள்ளார் என்று இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story