உலக செய்திகள்

சிங்கப்பூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: இந்திய வம்சாவளி போலீஸ்காரர் கைது + "||" + In Singapore Sexual harassment of young girls: Indian-origin policeman arrested

சிங்கப்பூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: இந்திய வம்சாவளி போலீஸ்காரர் கைது

சிங்கப்பூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: இந்திய வம்சாவளி போலீஸ்காரர் கைது
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அருண் பிரசாந்த் (வயது 25) போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
சிங்கப்பூர், 

கடந்த 2017-ம் ஆண்டில் பல இளம்பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் சமூக வலைத்தளம் மூலமாகவும், நேரடியாகவும் அருண் பிரசாந்த்,  பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள் பெற்றோர்களுடன் வந்து போலீஸ் நிலையத்தில் அருண் பிரசாந்த் மீது புகார் கொடுத்தனர். பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அவருடைய செல்போனை சோதனை செய்தபோது 700-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாசபடங்கள் இருந்தன. இதைத்தொடர்ந்து போலீசார் அருண்பிரசாந்த்தை சிறையில் அடைத்தனர். அவரது வேலையும் பறிக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு நேற்று சிங்கப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி வழக்கை விசாரித்து அருண் பிரசாந்த் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபணமானதால் அவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.