உலக செய்திகள்

பாகிஸ்தான் வசம் உள்ள ‘காஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார் ஆகிறது’ இம்ரான்கான் புலம்பல் + "||" + In the possession of Pakistan India is preparing for war to recover Kashmir Imran Khan lament

பாகிஸ்தான் வசம் உள்ள ‘காஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார் ஆகிறது’ இம்ரான்கான் புலம்பல்

பாகிஸ்தான் வசம் உள்ள ‘காஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார் ஆகிறது’ இம்ரான்கான் புலம்பல்
காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், தங்கள் தரப்புக்கு ஆதரவாக உலக நாடுகளை திரட்ட முயன்றது. ஆனால் அதில் தோல்வியடைந்துள்ள அந்த நாடு, தற்போது இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு எதிரான ஆற்றாமையை புலம்பலாக வெளியிட்டு வருகிறது.
இஸ்லாமாபாத், 

காஷ்மீரில் போருக்கு தயாராவதாக இந்தியா மீது மற்றொரு குற்றச்சாட்டை அந்த நாட்டு பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். பாகிஸ்தான் சுதந்திர தினத்தையொட்டி நேற்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் தொலைக்காட்சிமூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதியை மீட்பதற்காக இந்தியா போருக்கு தயாராவதாக, எங்கள் நாட்டு படையினருக்கு வலுவான ஆதாரம் கிடைத்து உள்ளது. ஆனால் இதற்கு தக்க பதிலடி கொடுக்க எங்கள் ராணுவமும் தயாராக இருக்கிறது என்று தெரிவித்தார்.

காஷ்மீரில் இந்தியா மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளை மீண்டும் கண்டித்த இம்ரான்கான், இந்த நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் நாடுகள்கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்தார். இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவதற்காக இந்தியா எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் எதிர்வினையாக பாகிஸ்தான் 2 அடி எடுத்து வைக்கும் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இம்ரான்கானுக்கு டிரம்ப் அறிவுரை: “இந்தியா உடனான பதற்றத்தை தணியுங்கள்”
காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது; அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.
2. இந்தியாவுடன் வர்த்தகத்தை நிறுத்தும் நடவடிக்கையால் பாதிக்கப்போவது பாகிஸ்தானே - இந்திய வணிகர்கள்
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்தால் பாகிஸ்தான் இந்தியாவுடன் வர்த்தகத்தை நிறுத்தும் நடவடிக்கையால் பாகிஸ்தானில் பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
3. ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு கவனம் தேவை - இம்ரான்கான் அறிவுறுத்தல்
ஈரான் விவகாரத்தில் அமெரிக்க கவனத்துடன் செயல்பட வேண்டுமென இம்ரான்கான் அறிவுறுத்தி உள்ளார்.
4. இம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின் உதவியாளர் - வலைத்தள ஆர்வலர்கள் கிண்டல்
பாகிஸ்தான் பிரதமரின் உதவியாளர், இம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்டார். இதனை வலைத்தள ஆர்வலர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
5. ‘சொத்து விவரங்களை 30–ந்தேதிக்குள் வெளியிடுங்கள்’ பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் வேண்டுகோள்
பாகிஸ்தான் மக்கள் வருகிற 30–ந்தேதிக்குள் தங்களின் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என பிரதமர் இம்ரான்கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.